79 வயது பாட்டி தலையில் டிவியை தூக்கிப்போட்ட 39 வயது பீர்முகமது..! ஈரோட்டில் அரங்கேறிய பயங்கரம்! பதற வைக்கும் காரணம்!

ஈரோட்டில் குடிபழக்கத்திற்கு அடிமையான பேரன் பாட்டியுடன் சண்டையிட்டு அவரை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


ஈரோடு விவேகானந்தர் நகரில் பீர்முகமது தன்னுடைய மனைவியுடன் வசித்து வந்தார். இவருக்கு குடிப்பழக்கம் இருந்ததால் அடிக்கடி மனைவியுடன் சண்டை போட்டு வந்தார். ஒரு கட்டத்தில் பீர்முகமதுவுடன் வாழமுடியாது என்ற சூழ்நிலையில், சண்டைபோட்டுக்குகொண்டுபிரிந்து விட்டார். இதனால் மேலும் குடிப் பழக்கத்திற்கு அடிமையான பீர்முகமது வீட்டில் மனைவியுடன் சண்டை போட்டுக் கொள்ள முடியாத குறையை பாட்டியிடம் நிவர்த்தி செய்துள்ளார்.

மினி வேன் ஓட்டுநராக பணிபுரிந்து வந்த பீர்முகமது பகலில் வேலைக்கு செல்வது. இரவில் குடித்து விட்டு வீட்டுக்கு வந்து நிம்மதியாக இருக்கும் பாட்டியிடம் சண்டை போடுவது என்பதே வேலையாக வைத்துள்ளார்.

நடிகர் வடிவேலு ஒரு படத்தில் ஆட்டோ ஓட்டுநராக இருப்பார். சரியாக 6 மணியானால் ஆட்டோவை நிறுத்திவிட்டு குடித்துவிட்டு வந்து தாயிடம் சண்டைபோடுவார். அதே பாலிசியைத்தான் பீர்முகமதுவும் கடைப்பிடித்துள்ளார்.

இந்நிலையில் இன்று அதிகாலை குடிபோதையில் பீர்முகமது வீட்டுக்கு வந்துள்ளார். நன்றாக உறங்கிக் கொண்டிருந்த பாட்டி ஜோகராம்மாளுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். பின்னர் பாட்டி எதிர்த்து பேச, அங்கிருந்த தொலைக்காட்சி பெட்டியை எடுத்து பாட்டி தலையில் போட்டுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே அவர் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார்.

சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஈரோடு சூரம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஜோகராம்மாள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக சூரம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து பீர்முகமதுவை கைது செய்தனர்.