வனப்பகுதியில் யாரும் பார்க்க கூடாத கோலத்தில் கிடந்த இளம் காதல் ஜோடி..! ஈரோடு பெருந்துறை அதிர்ச்சி!

2020-ம் பிறந்து முதல் சோக சம்பவமாக ஈரோடு மாவட்டத்தில் காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்டது நடைபெற்றுள்ளது.


ஈரோடு மாவட்டம் பெருந்துறை சிப்காட் வளாகம் அருகே அடர்ந்த வனப்பகுதி உள்ளது. வனப்பகுதியில் ஆணும், பெண்ணும் தூக்கிட்ட நிலையில் சடலமாக இருப்பதாக பெருந்துறை காவல்துறையினருக்கு பொதுமக்கள் தகவல் அளித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், 2 பேரின் உடலையைம் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து வழக்குப் பதிந்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில், உயிரிழந்த பெண்ணின் பெயர் சுகன்யா என்பது தெரியவந்துள்ளது. அந்த பெண்ணுடன் உயிரிழந்த இளைஞர் குறித்த விவரங்கள் தெரியவில்லை. அடர்ந்த வனப்பகுதியில் உண்மையிலேயே இருவரும் தற்கொலை செய்து கொண்டனராக அல்லது தனிமையில் இருப்பதற்காக வந்தவர்களை யாரேனும் அடித்து கொன்றுவிட்டு தூக்கில் தொங்க விட்டுள்ளனராக என்ற கோணத்தில் போலிசார் விசாரித்து வருகின்றனர்.

பொதுவாக காதல் ஜோடிகள் ஆள் அரவமற்ற இடங்களில் தனிமையில் இருக்க வேண்டும் என்பதற்காக செல்லவேண்டாம் என பலமுறை போலீஸ் அறிவுறுத்தி உள்ளது. அங்கு சில விஷமிகளால் ஏற்படும் ஆபத்தில் இருந்து தங்களை காப்பாற்றிக் கொள்வது சிரமம் என்பதை புரிந்து கொள்ளவேண்டும் என தெரிவித்துள்ளது.