வெங்காயத்தில் இத்தனை மகிமையா! தினம் ஒரு வெங்காயம் சாப்பிட்டு ஆரோக்கியம் பெறலாமே !!

சாப்பாட்டில் நாங்க வெங்காயமே சேர்க்க மாட்டோம் என்று பெருமையாக பலர் சொல்லிக்கொள்வதுண்டு. அதனால் எத்தனை பெரிய இயற்கை கொடையை இழக்கிறார்கள் என்பது தெரிவதில்லை. ஏனென்றால் வெங்காயம் அத்தனை மருத்துவ குணம் கொண்டது ஆகும்.


சிறிய வெங்காயத்தில் இன்சுலின் உள்ளது அதனால் நீரிழிவு நோயாளிகள் இதை அதிகமாகப் பயன்படுத்தி வந்தால் நீரிழிவு நோய் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும். அதேபோன்று தலையில் திட்டுத்திட்டாக முடி உதிர்ந்து வழுக்கை விழுந்திருந்தால் சிறு வெங்காயத்தை இரு துண்டாக நறுக்கி தேய்த்துவர, அந்த இடத்தில் நிச்சயமாக முடி வளரும். அதேபோன்று நறுக்கிய வெங்காயத்தை முகப்பரு உள்ள இடத்தில் தேய்த்தால் முகப்பரு நீங்கும்.

ஜலதோஷ நேரத்தில் வெங்காயத்தை தீயில் சுட்டு முகர்ந்தால் நல்ல பலன் கிட்டும். அதேபோன்று வெங்காயத்தை அரைத்து தொண்டையில் பற்றுப்போட, தொண்டை வலி குறையும். வெங்காயத்தை சாறு எடுத்து நீரில் கலந்து குடித்துவர சிறுநீர் கடுப்பு, எரிச்சல் நீங்கும்.

காச நோய்க்கும் வெங்காயம் சிறந்த முறையில் பயன் அளிக்கிறது. ஆம், தொடர்ந்து 15. வெங்காயத்தை தினமும் சாப்பிட்டுவர டி.பி.நோய் குறையும். வெங்காயச் சாற்றோடு சர்க்கரை சேர்த்து சாப்பிட, வாதநோய் குறையும்.

இவை எல்லாவற்றையும்விட ஒரு முக்கியமான சமாச்சாரம் இருக்கிறது. ஆம், வெங்காயத்தை பசும் தயிரில் கலந்து சாப்பிட்டுவர, தாது பலமாகும், ஆண்மை விருத்தியாகும். இதயக் கோளாறு உள்ளவர்களுக்கும் சின்ன வெங்காயம் சாப்பிடுவது நல்லது