வெளிநாட்டில் இருந்து வந்து பெற்ற தாயை கொலை செய்துவிட்டு தப்பிய கொடூர மகன்! பதற வைக்கும் காரணம்!

சென்னையில் வெளிநாட்டில் இருந்து வந்து பெற்ற தாயை கொலை செய்துவிட்டு தப்பியவனை போலீசார் தேடி வருகின்றனர்.


சென்னை பெசன்ட் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ரத்தினம். இவர் முன்னாள் அதிமுக எம்பி குழந்தைவேலுவின் மனைவி. சில ஆண்டுகளுக்கு முன் குழந்தைவேலு காலமானார். 

இதனால் அவரது மனைவி ரத்தினம் வீட்டில் தனியாக வசித்து வந்தார். நேற்றிரவு ரத்தினத்தின் வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது.  இதையடுத்து அவரது உறவினர் ஒருவர் சென்று பார்த்த போது, ரத்தினம் கொலை செய்யப்பட்டு கிடந்ததார்.

இதுகுறித்து அவர் போலீசாருக்கு தகவல் அளித்தார். விரைந்து வந்த போலீசார், உடலை மீட்டு பிரேதப்பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் வீட்டிற்கு ரத்தினத்தின் மகன் மட்டுமே சென்று வந்தது தெரியவந்தது.

 இங்கிலாந்து குடியுரிமை பெற்று அங்கேயே வசித்து வந்த பிரவீண் சொத்துகளை எழுதி வாங்க சென்னை வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. அப்போது ஏற்பட்ட தகராறில் பெற்ற தாயை கொலை செய்துவிட்டு பிரவீண் தலைமறைவாகியுள்ளான். 

தப்பி ஓடிய பிரவீணை போலீசார் தேடி வருகின்றனர். அவன் இங்கிலாந்து சென்று இருக்க கூடும் என்றும் அஞ்சப்படுகிறது.