திரும்பியே பார்க்காமல் என்ஜினை மட்டும் 2 கிலோமீட்டர் ஓட்டிச்சென்ற ரயில் ஓட்டுநர்! அச்சச்சோ பிச்சிக்கிச்சு

ஓடிக்கொண்டிருந்த ரயிலில் இருந்து என்ஜின் தனியாக சென்ற சம்பவமானது பயணிகளை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.


ஒடிசா மாநிலத்தின் தலைநகர் புவனேஸ்வர். ஆந்திரா மாநிலத்தில் செகந்திராபாத் எனும் இடம் உள்ளது. இவ்விரு இடங்களையும் இணைக்கும் வகையில் விசாகா என்ற ரயில் சென்று கொண்டிருக்கிறது. 

வழக்கம்போல புவனேஸ்வரில் இருந்து ஆந்திரா மாநிலம் நோக்கி ரயில் வந்து கொண்டிருந்தது. அப்போது நரசிபட்டினம் என்ற ஆந்திர மாநிலத்தின் புறநகரை எட்டிய போது, எதிர்பாராவிதமாக ரயிலிலிருந்து என்ஜின் தனியாக பிரிந்தது.

ஆனால் இதனை ரயில் ஓட்டுநர் கவனிக்கவில்லை. அவர் தொடர்ந்து என்ஜினை மட்டும் முன்னே செலுத்தி கொண்டிருந்தார். சுமார் இரண்டு கிலோ மீட்டர் தூரம் வரை என்ஜின் மட்டும் தனியாக சென்றுள்ளது. பெட்டிகள் நர்சிபட்டினத்திலேயே நின்று விட்டன. இதனை ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தோர் அதிகாரிகளிடம் தெரிவித்தனர். அவர்கள் ரயில் ஓட்டுநருக்கு தகவல் தெரிவித்தனர். 

ரயில் ஓட்டுநர் மீண்டும் பின்பக்கமாக 2 கிலோமீட்டர் ஓட்டி நர்சிபட்டினத்திற்கு வந்தார். இந்த சம்பவம் குறித்து ரயில்வே துறை மேலதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். எதிர்பாரா சம்பவத்தினால் அந்த மார்க்கத்தில் செல்ல வேண்டிய ரெயில்கள் சில மணி நேரம் தாமதமாக சென்றன. 

இந்த சம்பவமானது ரயிலில் பயணித்த பயணிகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது.