சாலையில் வேகமெடுத்த கார்! குறுக்கே வந்து காலை தூக்கி வைத்து யானை செய்த பகீர் செயல்! கோத்தகிரி பரபரப்பு!

காட்டுயானை சாலைக்குள் புகுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்ட சம்பவமானது கோத்தகிரியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


ஊட்டியிலிருந்து கோத்தகிரியில் வழியாக மேட்டுப்பாளையம் செல்வதற்கான சாலை உள்ளது.  இந்த சாலையின் குஞ்சபனை எனும் பகுதிக்கு அருகேயுள்ள 2-வது கொண்டை ஊசி வளைவில் நேற்று மாலையில் காட்டுயானை வலம் வந்துள்ளது. இதனால் அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள் அச்சத்தில் வாகனங்களை ஆங்காங்கே நிறுத்தி வைத்தனர். இதனால் சாலையின் இருபக்கமும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

ஆனாலும் தொடர்ந்து காட்டு யானையானது அங்குமிங்கும் சென்று கொண்டேயிருந்தது. அப்போது கார் ஒன்று முன்னேறி செல்ல முயன்றது. தன்னை நோக்கி வருவதை பார்த்து ஆவேசமடைந்த காட்டுயானை காரை நோக்கி ஓடியது. பிறகு காரை 2 முறை தனது காலால் மிதித்துள்ளது.  இதனால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது.

சிறிது நேரம் கழித்து காட்டுயானை ஆனது வனப்பகுதிக்குள் மீண்டும் சென்றுவிட்டது. இந்த சம்பவம் குறித்து அங்கிருந்த ஒருவர் கூறுகையில், "இந்த காட்டு யானை கடந்த 2 வாரங்களாக இங்குதான் சுற்றிக்கொண்டு வருகிறது. சென்ற வாரத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர்களை தாக்க முயன்றது இதே காட்டுயானை தான். ஆகவே மனிதர்களுக்கு பாதிப்பு ஏற்படுவதற்கு முன்பே இந்த காட்டு யானையை கட்டுப்படுத்த வேண்டும்" என்று கூறியுள்ளார்.

இந்த சம்பவமானது கோத்தகிரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.