மின்சார ரீடிங் எடுப்பதாக பெண்ணை அளவெடுத்த வயர்மேன்! வேலூர் கசமுசா!

ரீடிங் என்ற பெயரில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த மின்வாரிய ஊழியர்


வேலூர்: ரீடிங் எடுக்கிறேன் என்ற பெயரில், பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த மின்வாரிய ஊழியர் மீது விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

குடியாத்தம் கொசவன்புதூர் பகுதியை சேர்ந்த காஞ்சனா (40 வயது) என்பவர் இதுதொடர்பாக, மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில், ''எனது கணவர் வெளியூரில் தங்கி பணிபுரிவதால், நான் வீட்டில் தனிமையில் வசிக்கறேன். இதை அறிந்துகொண்ட மின்வாரிய ஊழியர் ஒருவர் ரீடிங் எடுக்கிறேன் என்று சொல்லி, அடிக்கடி வீட்டிற்குள் நுழைந்து என்னை கையை பிடித்து இழுத்து பாலியல் தொல்லை தருகிறார். இதுபற்றி வெளியில் சொன்னால் மின் இணைப்பை துண்டித்துவிடுவேன் என்றும் மிரட்டுகிறார். பதிலுக்கு நான் அவரை திட்டியதால் டோர் லாக் கட்டணம் என்ற பெயரில் ரூ.2,375 அபராதம் விதித்துள்ளனர். அந்த பணத்தை செலுத்த சென்றபோது, மின்வாரிய ஊழியர்கள் என்னை கேலி, கிண்டல் செய்கிறார்கள். எனவே, சம்பந்தப்பட்ட மின்வாரிய ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்று கூறியுள்ளார். 

இதன்பேரில், உரிய நடவடிக்கை எடுப்பதாக, மாவட்ட ஆட்சியரகம் சார்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.