கொசு ஜோக்கு தெரியுமா? இணையத்தை கலக்கும் நரேந்திரமோடி ராகுல் ஜோக்!

தேர்தல் நேரத்தில் நமது மக்களின் நகைச்சுவை உணர்ச்சி எல்லை மீறிப் போகும். அந்த வகையில் இது ஒரு ஜோக்.


ஆண்  கொசு : டார்லிங் உனக்காக ஒரு சிங்கத்தையே வேட்டையாடி கொண்டு வருவே ....*

பெண்  கொசு : ஓகே ஓகே போய் தூங்கு ...*

ஆண் கொசு : கண்ணே ! உனக்காக ஒரு யானையவே அடிச்சு கொண்டு வந்து கொடுப்பே ....*

பெண் கொசு : சரி .. சரி ... மொதல்ல தூங்க போ டார்லிங்...*

ஆண் கொசு : உன்ன நா மெர்சிடஸ் கார்ல உட்கார வெச்சு பாரீஸ் ரோட்ல சுத்தி காண்பிப்பே ....*

பெண் கொசு : என் மேல உனக்கு எவ்வளவு லவ் னு புரியுது டியர்.... காலையில பேசலா போய் தூங்கு ...*

ஆண் கொசு : நீ என்ன நம்ப மாட்டியா ..??? நாளைக்கு உனக்கு 100 கிராம்ல தங்க செயின் போடுவே பாரு ...*

பெண் கொசு : நா நம்புறே டியர் ... நீ இப்போ தூங்க போ ....*

ஆண் கொசு : உலகமே திரும்பி பாக்கற மாதிரி உனக்கு வைரத்துல நகை போடுவே பாரு ....*

இப்போது ஆண் கொசுவை ஓங்கி அறைந்த பெண் கொசு ...*

மோடியை  கடிச்சுட்டு இங்க வந்து ஔறாதேனு எத்தன தடவ சொல்லி இருக்குறேன். ...

அடுத்து ராகுல் காந்தியையும் அரவிந்த் கெஜ்ரிவாலையும் இணைத்து ஒரு ஜோக்.

கீழே கிடக்கும் 2,000 ரூபாய் நோட்டை எடுக்கிறார் அரவிந்த் கெஜ்ரிவால். அவர் ராகுலிடம், நீயும் என்னுடன் வந்ததால் எனக்கு ஃபிப்டி, உனக்கு ஃபிப்டி சரியா என்று கேட்கிறார்.

உடனே ராகுல், அப்படியே வைத்துக்கொள்வோம். மீதமிருக்கும் 1,900 ரூபாயை என்ன செய்யப் போகிறோம்? என்று கேட்டாராம்.