ஓட்டுக்கு பணம் வாங்குபவர்களுக்கு ஆப்பு வைக்க வருகிறது புதிய ஆப்! #cVIGIL..

இந்த ஆண்டிற்கான தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது தேர்தல் ஆணையம் ஓட்டிற்காக பணம் வாங்குவதை தடுக்கும் வகையில் ஒரு புது செயலியை அறிமுகம் செய்து உள்ளது. இந்த செயலியின் பெயர் சிவிஜில்(cVIGIL) என்பதாகும்.


தேர்தல் நேரத்தில் நடைபெறும் முறைகேடுகளை கண்கணிப்பதற்காகவே ப்ரேதேயேகமாக தேர்தல் ஆணையம் இந்த செயலியை அறிமுகம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.


இந்த செயலி வரும் மார்ச் 18-ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.  இந்த செயலியை கூகிள் பிலே ஸ்டார் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் பதிவிறக்கம் செய்தவுடன் இந்த செயலியில் பெயர் மற்றும் பிற தகவல்களை பூர்த்தி செய்து பதிவு செய்து கொள்ள வேண்டும்.


இந்த செயலி முதலில் உங்களின் அனுமதியை கேட்கும் , பின்பு உங்களுடைய பதிவு செய்யப்பட்ட எண்ணிற்கு  OTP அனுப்பப்படும். இதை பயன்படுத்தி இந்த செயலியை பயன்படுத்த ஆரம்பிக்கலாம்.


இந்த செயலியை பயன்படுத்தி 15 விதமான புகார்களை பதிவு செய்யலாம். அவை பின்வருவமாறு..


1. பணம் விநியோகம்.
2. பரிசுகள் / கூப்பன்கள் விநியோகம்.

3. மதுபான விநியோகம்.
4. போஸ்டர்கள் / அனுமதியில்லா பதாகைகள்.

5. துப்பாக்கி காட்சி, அச்சுறுத்தல்.

6. அனுமதி இல்லாமல் வாகனம்.

7. பணம் செய்தி.
8. சொத்து பாதுகாப்பு.

9. வாக்குப்பதிவு நாளில் வாக்காளர்களின் போக்குவரத்து.

10. வாக்குச் சாவடிக்கு 200 மீட்டருக்குள் பிரச்சாரம் செய்தல்.

11. தடை காலத்தில் பிரச்சாரம்.

12. மத அல்லது இனவாத பேச்சுகள் / செய்திகள்.

13. அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு அப்பால் ஸ்பீக்கர்களின் பயன்பாடு.

14. கட்டாய அறிவிப்பு இல்லாமல் சுவரொட்டிகள்.
15. பொது பேரணிகளின் போக்குவரத்து.


மேற்கூறிய புக்கர்களை பயனர்கள் பதிவு செய்த்து கொள்ளலாம். புகாரை பதிவு செய்தவுடன் பதிவு செய்தவரின் மொபைல் எண்ணிற்கு அடையாள எண் அனுப்பப்படும். இந்த என்னை வைத்து புகாரின் நிலையை எளிமையாக ட்ராக் செய்து கொள்ளலாம்.


இந்த புகாரின் விவரங்கள் சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் அனுப்பப்படும் அவர்கள் 15 நிமிடத்தில் விரைந்து சென்று அரைமணி நேரத்தில் இந்த புகாரை விசாரிக்க தொடங்குவார்கள். பின்பு தேர்தல் ஆணையத்தின் சிறப்பு குற்ற பிரிவிற்கு அனுப்பி 100 நிமிடங்களுக்குள் தகுந்த நடவடிக்கை எடுப்பர்.