உள்ளாட்சி தேர்தல் எப்போது? மாநில தேர்தல் ஆணையம் திடீர் அறிவிப்பு!

உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பாணை மே 31-ம் தேதிக்குள் வெளியிடப்படும் என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.


திமுக தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மாநில தேர்தல் ஆணையம் உயர்நீதிமன்றத்தில் தகவல்.

உள்ளாட்சி தேர்தலுக்கான ஆயத்தப் பணிகள் நடைபெற்று வருகிறது - மாநில தேர்தல் ஆணையம்.

தேர்தல் ஆணையத்தின் விளக்கத்தை ஏற்று வழக்கை ஜூன் 6-ம் தேதிக்கு ஒத்திவைத்தது உயர்நீதிமன்றம்.

இதனிடையே தேர்தல் தேதி மே 31ந் தேதி அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதால், அநேகமாக ஜூன் மாத இறுதியில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும்.

தமிழகத்தில் பொதுவாக இரண்டு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும். நாடாளுமன்ற தேர்தல் முடிந்த சூட்டோடு தமிழகம் உள்ளாட்சி தேர்தலுக்கும் தயாராக வேண்டும்.