அரிவாளுடன் வந்து கழுத்தை நெறித்த கொள்ளையன்! மனைவியுடன் சேர்ந்து ஓட ஓட விரட்டிய வீரத் தாத்தா! வைரல் வீடியோ!

திருடர்களை பிளாஸ்டிக் நாற்காலிகளினால் அடித்து தங்களை பாதுகாத்து கொண்ட சம்பவமானது கடையம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


கடையம் பகுதியில் கல்யாணிபுரம் எனும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் ஷண்முகவேல் வசித்து வருகிறார். இவருடைய மனைவியின் பெயர் செந்தாமரை. இருவருக்கும் 65 வயதுக்கு மேல் ஆகிவிட்டது. ஞாயிற்றுக்கிழமை காலையில் ஷண்முகவேல் தன் வீட்டு வாசலில் அமர்ந்து கொண்டிருந்தார்.

திண்ணையில் இருந்த நாளிதழை அவர் எடுக்க முற்பட்டார். அப்போது எதிர்பாராதவிதமாக முகமூடி அணிந்த திருடன் ஒருவன் அவர் பின்னால் வந்துள்ளான். திருடன் சண்முகவேலின் கழுத்தில் துணியை போட்டு நெரித்து கொலை செய்ய முயற்சித்தார். ஆனால் சண்முகவேல் தன் கை கால்களை உதைத்துள்ளார்.

வெளியில் வரும் சத்தத்தை கேட்ட அவருடைய மனைவியான செந்தாமரை அலறி அடித்துக்கொண்டு விரைந்தார். செந்தாமரை இருவரின் காலணிகளையும் திருடனின் முகத்தில் வீசினார். அப்போது இன்னொரு திருடனும் துணைக்கு வந்துள்ளான். இருவரின் மீதும் செந்தாமரை காலணிகளை தூக்கி வீசியதால் திருடர்கள் நிலைகுலைந்தனர்.

தருணத்தை பயன்படுத்திய கணவன்-மனைவி இருவரையும் பிளாஸ்டிக் நாற்காலிகளால் அடித்து துவைத்தனர். திருடர்களை அடித்ததில் நாற்காலி ஒன்று உடைந்து போனது. இவர்களை தாக்க இல்லாமல் திருடர்கள் அப்பகுதியிலிருந்து மிரண்டு ஓடிவிட்டனர்.

இந்த வீடியோவானது ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை கண்ட நெட்டிசன்கள் வயது முதிர்ந்த தம்பதியினரை பாராட்டி வருகின்றனர். இந்த சம்பவத்தின் வீடியோவானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.