சாதி மறுப்பு திருமணத்திற்கு அக்கா – தங்கச்சியை அலேக்காக தூக்கிய அண்ணன் தம்பி! பெரம்பலூரில் பதற்றம்

பெரம்பலூர் அருகே அக்கா மற்றும் தங்கச்சியை காதலித்து சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட அண்ணன் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


 பெரம்பலூர் மாவட்டம் அய்யமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ராமலிங்கம். இவருக்கு புவனேஸ்வரி, ரேணுகா தேவி என இரண்டு மகள்கள் உள்ளனர். கல்லூரியில் படித்து வரும் ரேணுகா மற்றும் புவனேஸ்வரி கடந்த வாரம் மாயமாகினர். கல்லூரி செல்வதாக கூறிவிட்டு சென்றவர்கள் வீடு திரும்பாத காரணத்தினால் ராமலிங்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

  இதன் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார் ரேணுகா மற்றும் புவனேஸ்வரியை தேடி வந்தனர். விசாரணையில் அய்யமங்கலம் கிராமத்தை சேர்ந்த அண்ணன் தம்பிகளான முருகராஜ் மற்றும் அரவிந்த் ஆகியோரையும் மாணவிகள் இருவரும் மாயமான நாள் முதல் காணவில்லை என்பதை கண்டறிந்தனர். இதனை தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் தான் அக்கா தங்கச்சிகளான புவனேஸ்வரி மற்றும் ரேணுகாதேவி அண்ணன் தம்பிகளான முருகராஜ் மற்றும் அரவிந்தை காதலித்து வந்துள்ளனர்.

  முருகராஜ் மற்றும் அரவிந்த் தாழ்த்தப்பட்ட சமுதாயத் சேர்ந்தவர்கள். இதனால் ரெட்டியார் சமுதாயத்தை சேர்ந்த தங்களை அவர்களுக்கு திருமணம் செய்து கொடுக்கமாட்டார்கள் என்று அஞ்சி இருவரும் அவர்களுடன் ஊரை விட்டு சென்றுள்ளனர். பின்னர் அக்கா தங்கச்சிகளான புவனேஸ்வரி, ரேணுகா தேவி அண்ண தம்பிகளான முருகராஜையும், அரவிந்தையும் திருமணம் செய்து பெரம்பலூரில் இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.

  இதனை அடுத்து பெரம்பலூர் சென்ற போலீசார் திருமணம் செய்து ஜோடியாக இருந்த இரண்டு ஜோடிகளையும் காவல் நிலையம் அழைத்து வந்தனர். அங்கு வந்த புவனேஸ்வரியும், ரேணுகாதேவியும் தாங்கள் விரும்பியே திருமணம் செய்ததாகவும், தாங்கள் மேஜர் என்பதால் தங்கள் கணவர்களுடன் செல்ல அனுமதிக்க வேண்டும் என்றும் போலீசாரிடம் தெரிவித்தனர்.

 இதனிடையே மகள்களை மீட்டுத்தரக் கோரி பெரம்பலூர் நீதிமன்றத்தில் ராமலிங்கம் வழக்கு தொடர்ந்துள்ளார். இதனை அடுத்து பெண்கள் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீசார் முடிவெடுத்துள்ளனர். தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த சகோதரர்கள் இருவர், பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த பெண்கள் இருவரை காதல் திருமணம் செய்து கொண்டதால் பெரம்பலூர் அய்யமங்கலத்தில் பதற்றம் நிலவுகிறது.