வாடகை வீட்டில் விபச்சார புரோக்கர் ஒருவர் 3 பெண்களை வைத்து விபச்சாரம் செய்து வந்த சம்பவமானது நாமக்கல்லில் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஒரு வீடு..! கவுரி, சரசு, ஜோதி..! 3 பெண்கள்! நாமக்கல் பரமத்தி பாவடித் தெருவில் நூதன விபச்சாரம்!
நாமக்கல் மாவட்டத்தில் பரமத்தி என்னும் இடம் அமைந்துள்ளது. இங்குள்ள பாவடித்தெருவில் வாடகை வீட்டில் சுப்பிரமணி சதாசிவம் என்பவர் வசித்து வந்தார். இந்நிலையில் ஆண்கள் வீட்டில் சந்தேகிக்கும் படி பல்வேறு சம்பவங்கள் சமீப காலங்களில் நிலவி வந்துள்ளன. ஆள் நடமாட்டம் அதிகரித்தல் போன்றவை அக்கம்பக்கத்தினர் சந்தேகிக்க செய்தது. உடனடியாக அவர்கள் இதுகுறித்து பரமத்தி காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தனர்.
காவல்துறை அதிகாரிகள் மஃப்டியில் சம்பந்தப்பட்ட தெருவில் பல நாட்களாக கண்காணித்து வந்தனர். அப்போது அந்த வீட்டில் விபச்சாரம் நடப்பது போன்ற சந்தேகம் காவல்துறையினருக்கு ஏற்பட்டது. திடீரென்று நேற்று அதிரடியாக அந்த வீட்டிற்குள் சென்று சோதனை நடத்தினர்.
அப்போது சுப்பிரமணிய சதாசிவம் கையும் களவுமாக சிக்கிக்கொண்டார். மேலும் அங்கு சரசு,கௌரி,ஜோதி ஆகிய 3 பெண்களை வைத்து சதாசிவம் விபச்சாரம் நடத்தி வந்ததும் உறுதியானது. உடனடியாக அனைவரையும் காவல்துறையினர் பரமத்தி காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவமானது நாமக்கலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.