வரும் 25ம் தேதி உலகிற்கு ஆபத்து நிகழ வாய்ப்பு இருக்கிறதாம்! எப்படின்னு தெரியுமா?

இந்த வருடம் டிசம்பர் மாதம் 25ஆம் தேதி முதல் 27ம் தேதி வரை 3 நாட்கள் தனுசு ராசியில் ஆறு கிரகங்கள் ஒன்றாக இணைந்து ராகுவின் பார்வையை பெறுகிறார்கள்.


இத்தகைய கோள்சார அமைப்பு அபூர்வமானது. மேற்கூறிய நாட்களில் தனுசு ராசியில் சூரியன், சந்திரன், குரு, சனி, புதன், கேது ஆகிய கிரகங்கள் ஒன்றாக இணைந்து ராகுவின் சுக பார்வையைப் பெறுகிறார்கள் இந்த கோள்சார கிரக சேர்க்கை நெருப்புக்கும் காற்றுக்குமான மிகப் பெரும் போராட்டமாக இருக்கும் என்கிறார்கள் சில ஜோதிடர்கள்.

இதுபோன்ற கோள்சார அமைப்பு 1482 ஆம் வருடம் மிகப்பெரும் சாம்ராஜ்ஜியங்களை காணாமல் போகச் செய்துள்ளது. மனிதர்களின் மனநிலையை வெகுவாக பாதித்துள்ளது. இதே கிரக சேர்க்கையில் தான் கண்ணெதிரே தனுஷ்கோடி 1964ம் வருடம் டிசம்பர் 25 ஆம் தேதியில் முற்றிலும் அழிந்து போனது. அதனால் இந்த முறையும் சிறிய அளவிலாவது நாட்டுக்கும் மக்களுக்கும் சேதம் ஏற்பட வாய்ப்புள்ளது.

ஆத்மகாரகனான சூரியன், மனோகாரகனான சந்திரன், ஞானகாரகனான கேது, பாக்கியகாரகனான குரு, புத்திகாரகனான புதன், ஆயுள்காரகனான சனி இவர்கள் அனைவரும் ஒரே ராசியில் சேருகின்றனர். இவை அசுப கிரகமான ராகுவின் பார்வையில் ஒரு நீள் வட்டப்பாதையில் இயங்கும்போது இந்த கிரகச் சேர்க்கையினால் இவர்களிடம் இருந்து வெளிப்படும் கதிர்வீச்சும் ராகுவின் கதிர்வீச்சும் ஒன்றாக வெளிப்படுகிறது.

அதனால் இந்த மூன்று நாட்களும் 12 ராசியினருக்கும் பதட்டம், கோபம், ரத்த அழுத்தம், மனச்சோர்வு, இனம்புரியாத கலவரம் என்று அமைதியற்ற சூழ்நிலையாக இருக்கும் என்று கருதப்படுகிறது. இதில் குறிப்பாக தனுசு ராசியில் இந்த கிரகங்கள் சேர்வதால் இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு மிகவும் கலவரமாக இருக்கும். கன்னி ராசியினருக்கு காலில் இனம்புரியாத மிகுந்த வலி ஏற்படும். மகர ராசியினருக்கு மனதில் சிந்தனைகள் மாறுபடும் என்கின்றனர் ஜோதிடர்கள்.

பஞ்சாங்கத்தின் அடிப்படையில் இந்த உலகம் மூன்று யுகங்களையும் கடந்து நான்காவது யுகத்தின் தொடக்கத்தில் இருக்கிறது. கலியுகம் 4 லட்சத்து 32 ஆயிரம் வருடங்களை கொண்டுள்ளது. கலியுகம் தொடங்கி தற்போதுதான் 5119 வருடங்களாகிறது. அந்த வகையில் இன்னும் பல லட்சம் ஆண்டுகள் பூமி உயிர்ப்புடன் ஜீவித்திருக்கும்.

இந்த ஆறு கிரகச் சேர்க்கை தனுர் ராசியில் நிகழ்வதாலும், ராகுவால் பார்க்கப்படுவதாலும் எந்தவிதமான அசம்பாவிதங்களும், இயற்கை சீற்றங்களோ ஏற்பட வாய்ப்பு இல்லை. காரணம் ராகுவை குரூரக்கிரகம் என்றே எல்லோரும் பார்க்கின்றனர். ராகு ஒரு கிரகத்தைப் பார்க்கும் பொது அதன் குணங்களை நல்லவிதமாக மாற்றுவார் என்பது ஜோதிட விதிகளில் ஒன்று. இதன்படி கிரகங்கள் ஆறும் சேர்க்கையில் சுய லாபம் உண்டு.

இது ஒரு வகை கூட்டு யோக நாள் என்று சொல்லலாம். ஏனெனில் 25ஆம் தேதி சர்வ அமாவாசை. சூரியனின் ஆதிக்கம் பூமியின் மேல் அதிகம் இருக்கும்போது துர்நிகழ்வுகளுக்கு வாய்ப்பில்லை. மறுநாள் வியாழக்கிழமை அமாவாசை திதி, மூல நட்சத்திர காலத்தில் சூரிய கிரகணம் நிகழ்கிறது. அர்க்கோபராக புண்ணிய காலம் என்பதால் அன்று சுப நிகழ்வுகளே நடக்கும். அன்று இந்தியாவில் மாலை நேரத்தில் மழை பொழிவு சிறிதளவு இருக்கும்.

27ஆம் தேதி மார்கழி மாதத்தின் சந்திர தரிசனம் காணக் கூடிய நாள். நவநாயகர்களில் ஸ்தான பலன்களைக் கூற சந்திரனே அதிகாரம் படைத்தவர். ஆகவே அவர் மற்ற கிரகங்களோடு சேர்ந்திருக்கிற காலகட்டத்தில் வானில் கூட விரும்பத்தகாத நிகழ்வுகள் நடக்க வாய்ப்பில்லை. குரு தன் சொந்த வீட்டில் கால புருஷ தத்துவத்துக்கு தர்ம ஸ்தானத்தில் இருப்பதும் மேலும் அது அவரது ஆட்சி வீடு என்பதாலும் தன்னுடன் தன் வீட்டில் சேர்ந்த அனைத்து கிரஹங்களுக்கும் நன்மையே செய்யும் என ஜோதிடர்கள் கூறுகின்றனர்.

மொத்தத்தில் இந்த அபூர்வ கிரகசேர்க்கை நாட்டுக்கும் மக்களுக்கும் நன்மையே செய்யும் என்பது சில ஜோதிடர்கள் முடிவான கருத்து. ஆகவே இந்த கிரஹ சேர்க்கையால் எவரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை. சவாலான இந்த மூன்று நாட்களில் கடவுள் நமக்காகவே அமாவாசை, அனுமன் ஜெயந்தி, விசேஷ சந்திர தரிசனம் போன்றவற்றைத் தந்துள்ளார்.