உயிரோடு இருக்கும்போதே கண்கள் தோண்டியெடுக்கப்பட்ட ஈழப் போராளிகளின் நினைவு தினத்தை மறக்கலாமா?

இலங்கையில் உள்ள வெலிக்கடே சிறையில் 1983 ஜூலை 25ம் தேதி கலவரத்தில் 53 போராளிகள் கொல்லப்பட்டிருந்தனர், மிக கொடூரமாக கொல்லபட்டனர்.


அதுவும் குட்டிமணி, ஜெகன் கண்களை உயிரோடு தோண்டியெடுத்து கொலை செய்தனர். ஏன் சிங்களர்க்கு அவ்வளவு கோபம்? குட்டிமணி குழுதான் முதன் முதலில் ஆயுதம் எடுத்து சிங்களனை மிரட்டியது, திருப்பி அடிக்க அவர்கள்தான் சொல்லிக் கொடுத்தார்கள். பிரபாகரனை போல பங்கரில் பதுங்கியவனில்லை குட்டிமணி, போலிஸ் நிலையத்தை நொறுக்கிவிட்டு ஊருக்குள் வாலிபால் ஆடிகொண்டிருக்கும் அளவு அவனிடம் தைரியம் இருந்தது.  அந்த கும்பலில் 11 வயதில் இணைந்தவர்தான் பிரபாகரன், அன்று அவருக்கு இருந்த வேலை துப்பாக்கியினை துடைத்து வைப்பது

மிகபெரும் துணிச்சலான தாக்குதலை எல்லாம் குட்டிமணி நடத்தினார், பெரும் பெயர் அவருக்கு இருந்தது, இந்த குழு தொடங்கிய இயக்கம்தான் டெலோ. இந்த டெலோவில் இருந்ததுதான் பிரபாகரனும், சபாரத்தினமும் உருவானார்கள். நீர்வேலி வங்கிகொள்ளையில் சிங்களன் தேட இந்தியாவிற்கு தப்ப மிக ரகசியமான இடத்தில் தங்கியிருந்தனர் குட்டிமணியும், ஜெகனும். அப்பொழுதுதான் தகவல் கிடைத்து சிங்களன் சுற்றிவளைத்தான். இந்த தகவலை தன் கும்பலை சேர்ந்த ஒருவன்தான் சிங்களனுக்கு சொன்னான் என பின்னர் குட்டிமணிக்கு தெரிந்தது

நான் சாகின்றேன், ஆனால் என் கண்களை எடுத்து ஒருவருக்கு பொருத்துங்கள், அவர்கள் மூலம் பின்னாளில் மலரும் ஈழம் காண்பேன் என அதிரடியாக சொன்னான் குட்டிமணி. இந்த மாவீரர்கள்தான் வெலிகடை சிறையில் இருந்தனர் , தூக்கு விதிக்கபட்டாலும் தப்பியோ அல்லது அரசியல் நெருகடியிலோ இவர்கள் வெளிவரும் வாய்ப்பு இருந்தது. 

இந்நிலையில்தான் புலிகளின் ராணுவம் மீதான‌ அதிரடி தாக்குதலும் கொழும்பு கலவரமும் வந்து, வெலிக்கடை சிறையிலும் தொடர்ந்தது. கைதிகள் எனும் பெயரில் சிங்கள ரவுடிகள் உள்ளே அனுமதிக்கபட்டும் அந்த குட்டிமணி கோரகொலை நடந்தது, இந்தக் கண்கள் பார்க்க ஈழம் வேண்டுமா என்றுதான் அவர் கண்களை பிடுங்கினார்கள். இன்னமும் அவர்களுடைய தியாகத்திற்கு தீர்வு கிடைக்கவில்லை என்பதுதான் வேடிக்கை. இன்றைய தினத்தில் ஈழத்துக்காக உயிர் துறந்த குட்டிமணி, ஜெகனை ஒரு கணம் நினைப்போம்.