தினகரனை கோர்ட்டுக்கு இழுத்த எடப்பாடி! -10 தொகுதிக்கு ஆள் பிடிக்கும் தினகரன் !!

தொடர்ந்து குடைச்சல் கொடுத்துவரும் தினகரனை நீதிமன்றத்துக்கு வரவழைத்து டார்ச்சர் கொடுக்கும் வேலை தொடங்கிவிட்டது. இனி, தொடர்ந்து பல்வேறு வழக்குகளில் அவரை அலைக்கலைப்பதுடன், தேர்தல் நேரத்தில் அவரை சிக்கவைக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது.


எடப்பாடி அரசுக்கு பலமுறை தினகரன் நாள் குறித்தும்அது கலையாமலும் கசங்காமலும் ஆட்சி வண்டி போய்க்கொண்டு இருக்கிறதுதொடர்ந்து பல்வேறு கூட்டங்களில் அ.தி.மு.அரசை கிண்டல் செய்து தினகரன் பேசியதைக் கண்டு ஆளும் தரப்பு கொந்தளித்ததுஅதுவும் கடந்த வருடம் கரூர் மாவட்டத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய தினகரன எடப்பாடியை விளாசித்தள்ளினார்.மத்திய அரசின் கைப்பாவையாக தமிழக அரசு இருந்து மக்களை ஏமாற்றி வருகிறது என்று சொல்லியிருந்தார்அதன்பிறகு வழக்கம்போல் ஆட்சிக் கலைப்புக்கு நாளும் குறித்திருந்தார்அதனால்கரூர் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் 2018 செப்டம்பர் 19அன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சார்பில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது..


அதன்பிறகு இந்த வழக்கு,, கடந்த அக்டோபர் 3ம் தேதி சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள எம்.பி., எம்.எல்.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.. இந்த நிலையில்இந்த வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஜெ.சாந்தி முன்னிலையில் விசாரணை நடைபெற்றது.


இந்த வழக்கில் டி.டி.வி.தினகரன் நேரில் ஆஜரானார்அப்பொழுது வழக்கு நகலை தினகரன் கையெழுத்திட்டு பெற்றுக்கொண்டார்.. இதனையடுத்து அவதூறு வழக்கு விசாரணை வரும் பிப்ரவரி 4ம் தேதிக்கு நீதிபதி சாந்தி ஒத்திவைத்தார்..அதன்பிறகு வெளியே வந்த தினகரன் வழக்கம்போல் எடப்பாடிக்கு எதிராக பேட்டி கொடுத்தார்.

அப்போது, ‘’அவதூறு வழக்கு போடப்பட்டது உண்மைக்கு மாறானதுநீதிமன்றத்தின் அனுமதி பெற்றுத்தான் போராட்டம் நடத்தினேன்இந்த அரசின் அவல நிலையை குறித்துதான் அந்த போராட்டத்தில் பேசினேன்என்னை பழி வாங்க முயற்சிக்கிறார்கள்என்று சொன்னார்.


அதனையடுத்து வழக்கம்போல் கூட்டணி பேச்சுவார்த்தை குறித்தும் மழுப்பலான பதிலைக் கூறினார்.

ஏனென்றால்இதுவரை தினகரனுடன் கூட்டு சேர்வதற்கு ஒரு கட்சிகூட முன்வரவில்லைஇவரது அழைப்பை ஏற்பதற்கு கமல்ஹாசன்கூட தயாராக இல்லையாம்அதனால் தனியே நிற்பதுஎன்றும் குறிப்பிட்ட சில தொகுதிகளில் மட்டும் கவனம் செலுத்துவது என்றும் முடிவு எடுத்திருக்கிறாராம்.


அதன்படி 10 நாடாளுமன்றத் தேர்தலில் மட்டும் கவனம் வைக்க நினைக்கிறாராம்குறிப்பாக சென்னைமதுரைதேனி,தென்காசிதிருநெல்வேலிராமநாதபுரம்நாகைமயிலாடுதுறைதஞ்சைகோவை என்று கணக்கு எடுத்திருக்கிறாராம்.தேவையில்லாமல் அனைத்து தொகுதிகளுக்கும் போட்டியிட்டு பணத்தை இழக்கவேண்டாம் என்ற முடிவுக்கு வந்திருக்கிறாராம்..இந்த 10தொகுதிகளிலும் கோடிகளில் செலவழிக்கக்கூடிய ஆட்களைத் தேடி வருகிறாராம் தினகரன்.