எடப்பாடியாரின் காவல் துறைக்கு மத்திய உள் துறை அமைச்சகம் பாராட்டு.

இந்தியாவில் மிகச் சிறப்பாக செயல்படும் காவல் நிலையங்கள் குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் ஆய்வு செய்து ஆண்டு தோறும் கெளரவித்து வருகிறது.


அந்த வகையில் இந்த ஆண்டுக்கான டாப் -10 காவல் நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டன. இதில், தமிழகத்தில் சேலம் சூரமங்கலம் காவல்நிலையத்திற்கு 2ம் இடம் கிடைத்துள்ளது.

மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள இந்த பட்டியல் மூலம் தமிழக காவல் துறைக்கு இந்திய அளவில் பெருமை கிட்டியுள்ளது. காவல் துறை சுதந்திரமாகவும், சிறப்பாகவும் செயல்படுகிறது என்பதற்கு இதை விட சாட்சிகள் வேண்டுமா என்ன..?