விவசாயிகளுக்காக எடப்பாடியாரின் அடுத்த அறிவிப்பு... அலறும் தி.மு.க.

நானும் ஒரு விவசாயி, எனக்கு விவசாயிகளின் கஷ்டங்கள் புரியும் என்று பேசுவது மட்டுமின்றி, அதனை செயலிலும் காட்டி வருகிறார் தமிழக முதல்வர் எடப்பாடி விவசாயி. இன்று அவர் வெளியிட்டிருக்கும் புதிய அறிவிப்பு தி.மு.க.வை அலறவிட்டுள்ளது.


ஒவ்வொரு மாவட்டத்தில் தமிழக முதல்வர் தேர்தல் பிரசாரம் செய்யும்போது, புதுப்புது அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அவரது அறிவிப்புகள் நல்ல வரவேற்பை பெறுவதுடன், திமுகவினரும் குறை சொல்ல முடியாத சூழலும் ஏற்படுத்துகிறது.

இந்த நிலையில், திருப்பூர் மாவட்டம் உடுமலை பேட்டையில் மக்களிடையே வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, விவசாய பம்புசெட்டுகளுக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என அறிவித்தார். ஏற்கனவே ரூ.12 ஆயிரம் கோடி பயிர் கடன்களை தள்ளுபடி செய்த நிலையில், விவசாயிகளுக்காக மேலும் ஒரு அறிவிப்பை வெளியிட்டிருப்பது, பெரும் வரவேற்பையும், ஆதரவையும் பெறச் செய்துள்ளது.

இப்படி அ.தி.மு.க.வே எல்லா நன்மைகளையும் செய்து முடித்துவிட்டால், தி.மு.க.வுக்கு பேசுவதற்குக்கூட எதுவுமே இருக்காது என்று கலங்குகிறார்கள், அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள்.