சென்னையை அழகாக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மேற்கொண்டு வருகிறார். மெரினாவை அழகாக்கும் வகையில் கடைகள் மாற்றியமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
சென்னைக்கு வந்தாச்சு நம்ம செல்ஃபி மையம்... இளசுகளைக் கவரும் எடப்பாடியாரின் அடுத்த அதிரடி
இப்போது இளசுகளின் ஒரே ஆசை செல்ஃபி மோகம்தான். ஆம், ஒவ்வொரு நிமிடமும் தங்களை புகைப்படம் எடுத்துக்கொள்ள ஆசைப்படுகிறார்கள். அவர்களின் ஆசையை நிறைவேற்றும் வகையில் செஃப்லி மையம் அமைத்திருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
மெரினா கடற்கரையில் உள்ள ராணி மேரி கல்லூரிக்கு எதிர்ப்பில் சென்னையின் அடையாளத்தை வெளிப்படுத்தும் வகையில் ரூபாய் 24 லட்சம் செலவில், செல்ஃபி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இளைய தலைமுறையினரைக் கவரும் வகையில் இந்த செல்ஃபி மையம் அமைக்கப்பட்டிருக்குது.
நாட்டின் பெருநகரங்களான புதுடெல்லி, ஹைதராபாத். பெங்களூரு ஆகிய நகரங்களில் உருவாக்கப்பட்டுள்ள சிற்பங்களின் தொடர்ச்சியாக சென்னையில் தற்பொழுது "நம்ம சென்னை” அடையாள சிற்பம் என்பது குறிப்பிடத்தக்கது.
அதோடு, மாநகராட்சியின் சீர்மிகு திட்டத்தின் கீழ் இரண்டாம் கட்ட எலக்ட்ரிக் மிதிவண்டி திட்டத்தையும் தொடக்கி வைத்தார். இந்த திட்டத்தின் மூலம், சென்னையின் பல்வேறு இடங்களில் கூடுதலாக 1000 எலக்ட்ரிக் மிதிவண்டிகள் கொண்டு வரப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்குது.