தமிழகத்தில் மருத்துவப் புரட்சி… 2000 மினி கிளினிக் ரெடி… எடப்பாடியார் அறிவிப்பு

ஏழைகளுக்கு உதவும் வகையில் தமிழகம் முழுவதும் மினி கிளினிக் வரும் டிசம்பர் 15ம் தேதிக்குள் தொடங்கப்படும் என்ற எடப்பாடியாரின் அறிவிப்புக்கு தமிழக மக்களிடம் பெருவரவேற்பு கிடைத்துள்ளது.


இதுகுறித்துப் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ‘’தமிழ்நாடு முழுவதும், ஒரு மருத்துவர், ஒரு செவிலியர் மற்றும் ஒரு உதவியாளருடன் 2,000 மினி கிளினிக் துவங்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்பட்டு, டிசம்பர் மாதம் 15-ஆம் தேதிக்குள் தொடங்கப்படும் என்ற மகிழ்ச்சியான செய்தியை தெரிவித்துக் கொள்கிறேன். 

கொரோனா அச்சம் காரணமாக சாதாரணமான காய்ச்சல் உள்ளிட்ட விஷயங்களில் சிகிச்சை எடுத்துக்கொள்வதற்கு பொதுஜனங்கள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகிறார்கள். இவர்களது குறையைப் போக்கும் வகையில், டிசம்பர் 15ம் தேதிக்குள் தொடங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

இந்த விஷயம் மக்களிடம் பெருமகிழ்ச்சி ஏற்படுத்தியுள்ளது.