வெளிநாட்டில் கோட் சூட்டுக்கு மாறியது ஏன்? சென்னை திரும்பிய எடப்பாடியின் அடடே அட்டகாச பதில்!

பிரிட்டன் மற்றும் அமெரிக்காவில் கோட் சூட் அணிந்தது ஏன் என்பதற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்.


அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் துபாய் சென்ற முதலமைச்சர் 14 நாட்களுக்கு பிறகு சென்னை திரும்பினார். மூன்று நாடுகளிலும் பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள மூலம் சுமார் 14 ஆயிரம் கோடி ரூபாய் வரை முதலீடுகளை முதலமைச்சர் ஈர்த்துள்ளார். இதனை அடுத்து எடப்பாடியை சென்னை விமான நிலையித்தில் வரவேற்க ஏராளமானவர்கள் திரண்டனர்.

வரவேற்பிற்கு பிறகு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் வெளிநாடுகளில் தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி சட்டையை அணியாமல் கோட் சூட்டுக்கு மாறியது ஏன் என்று கேள்வி எழுப்பினர். அதற்கு தமிழகத்தில் இருக்கும் போது நமது பாரம்பரிய உடை அணிகின்றேன்.

ஆனால் வெளிநாடு செல்லும் போது அங்கு இருப்பவர்களுக்கு ஏற்ற உடை அ ணிய வேண்டியது அவசியம். அதனால் தான் கோட் சூட் அணிந்து சென்றேன் என்று கூறினார்.