வாக்காளர்கள் எங்க போனாங்க? வேலூரில் தனியாக பிரச்சாரம் செய்த எடப்பாடி!

வாக்காளர்கள் யாருமே இல்லாத நிலையில் வெறிச்சோடிய சாலைகள் முதலமைச்சர் எடப்பாடி வாக்கு சேகரித்த வீடியோ வைரலாகி வருகிறது.


நேற்று சேலத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரத்தை தொடங்கினார். அதனை தொடர்ந்து திருவண்ணாமலையில் பிரச்சாரம் மேற்கொண்ட எடப்பாடி பழனிசாமி இன்று வேலூரில் அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏசி சண்முகத்தை ஆதரித்து பிரச்சாரம் செய்தார்.

தூக்கத்தில் பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த இடத்தில் வேனில் இருந்தபடியே முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஏசி சண்முகத்திற்கு வாக்கு சேகரித்தார். அந்த இடத்தில் பிரசாரத்தை முடித்துவிட்டு இன்னொரு இடத்திற்கு பிரச்சாரத்திற்கு புறப்பட்டது முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் வேன்.

அப்போது வேனில் மேல் நின்றபடி கைகளைக் கூப்பி வாக்கு கேட்டபடி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நின்று கொண்டிருந்தார். ஆனால் இதில் கொடுமை என்ன என்றால் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பார்ப்பதற்கு சாலையில் யாருமே இல்லை.

அதிமுக கட்சித் தொண்டர்கள் கூட இல்லாத நிலையில் வெறிச்சோடிய சாலைகள் முதலமைச்சர் ஆள் அரவமற்ற இடத்தில் வாக்கு சேகரித்த படி சென்றார். ஆளே இல்லாத டீக்கடையில் யாருக்கு முதலமைச்சர் டீ ஆத்திக் கொண்டிருக்கிறார் என்று கேட்டு அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.