முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பொங்கலுக்கு தமிழக மக்களுக்கான பரிசு தொகுப்பை வழங்கும் திட்டத்தை இன்றைய தினம் துவங்கி வைக்கிறார்.
பொங்கல் பரிசு தொகுப்பு திட்டத்தை இன்று தொடங்கி வைக்கிறார் தமிழக முதல்வர்!
ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் பொங்கல் விழாவை முன்னிட்டு மக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவது வழக்கம் . அந்த வகையில் வரப்போகும் பொங்கல் விழாவிற்கான பரிசு தொகுப்பை வழங்கும் விழாவை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்றைய தினம் துவங்கி வைக்க உள்ளார்.
குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் போகும் செய்தியை கள்ளக்குறிச்சி மாவட்ட துவக்க விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதனடிப்படையில் பரிசு தொகுப்பில், ஆயிரம் ரூபாய் பணம், பச்சரிசி, வெல்லம், கரும்பு, முந்திரி ,உலர் திராட்சை, சிறுபருப்பு, ஏலக்காய் ஆகியவை அடங்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
2 ஆயிரத்து 363 கோடி ரூபாய் செலவில், 2 கோடியே 5 லட்சம் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட உள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். மேலும் இந்த சிறப்பு திட்டத்தினை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்றைய தினம் தலைமைச் செயலக அலுவலகத்தில் துவங்கி வைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.