ஒரே நாளில் மூன்று மதத்துக்கும் எடப்பாடியார் சமமான மரியாதை… இதுதான் ஆன்மிக அரசியல்…

ஆன்மிக அரசியல் என்று எத்தனையோ பேர் என்னென்னவோ சொல்லிக்கொண்டு திரிகிறார்கள். அவர்கள் அனைவருக்கும் ஆன்மிக அரசியல் என்றால் என்னவென்று பாடமே நடத்திவிட்டார் எடப்பாடி பழனிசாமி.


ஆம், புயல் நிவாரணம் மற்றும் ஆய்வுக்காக கடலூர் மற்றும் டெல்டா மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட இடங்களில் நேரடியாகக் களமிறங்கி ஆய்வு செய்துவருகிறார் எடப்பாடி பழனிசாமி

 நாகை மாவட்டத்தை அவர் அண்மையில் பார்வையிடச் சென்றிருந்தார். சேதப் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களின் குறைகளைக் கேட்டறிந்த எடப்பாடி, அன்றிரவு வேளாங்கண்ணியில் தங்கினார். 

மறுநாள் காலையில் புகழ்பெற்ற வேளாங்கண்ணி தேவாலயத்திற்கு சென்றார். அங்கு நடைபெற்ற பிரார்த்தனை நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டார். பேராயர்கள் எடப்பாடிக்கு ஆசீர்வாதம் வழங்கினர். தேவாலய வளாகத்தில் திரண்டிருந்த திரளான கிறிஸ்தவ மக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

 இதனைத் தொடர்ந்து அருகிலுள்ள நாகூர் தர்காவுக்கும் சென்றார். அங்கும் எடப்பாடிக்கு அசத்தலான வரவேற்பு தரப்பட்டது. தர்காவின் உட்பகுதி வரை அழைத்துச் செல்லப்பட்ட எடப்பாடிக்கு மத குருக்கள் ஆசி வழங்கினர். சிறிது நேரம் கண்மூடி பிரார்த்தனை செய்த அவர் காணிக்கையும் செலுத்தினார். சேதமடைந்துள்ள தர்கா குளத்தின் கரைகளை பார்வையிட்ட அவர், உடனடியாக அதனை சீர் செய்ய உத்தரவிட்டார்.

 அதன் பின்னர் மயிலாடுதுறை சென்ற எடப்பாடி, தருமபுரம் ஆதீனத்திற்கு சென்றார். அங்கு அவருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. ஆதீனத்தின் 27வது மடாதிபதியான ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகளை சந்தித்து ஆசி பெற்றார்.

இவை திட்டமிட்ட நடவடிக்கை இல்லை, இயல்பாக நடந்தவை என்பதுதான் ஆச்சர்யம். இப்படி ஒரே நாளில் அனைத்து மதத்தினரையும் சமமாக மதித்து அன்பு செலுத்தும் எடப்பாடியார் பழனிசாமியை விட, ஆன்மிக அரசியலை வேறு யாரால் சிறப்பாக நடைமுறைப்படுத்த முடியும்..?

எம்மதமும் சம்மதம் என்பதுதான் எடப்பாடியார் கோட்பாடு.