எடப்பாடி அரசுக்கு வெற்றி மேல் வெற்றி குவிகிறது.... வியந்துபார்க்கும் அண்டை மாநிலங்கள்!

கொரோனா காலத்தில் இந்தியா மட்டுமின்றி உலகமே பொருளாதாரத்தில் தள்ளாடி வந்த நேரத்தில், தமிழகத்தில் மட்டும் முதலீடுகளைக் கொண்டுவந்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. இவரது ஆட்சி, தொடர்ந்து பல சாதனைகள் படைப்பதைக் கண்டு அண்டை மாநிலங்கள் ஆச்சர்யப்பட்டு வாய் திறக்கின்றன.


ஏற்கனவே மருத்துவம், கல்வி, தொழில் துறை, நீர் மேலாண்மை எனப் பல்வேறு துறைகளில், பிற மாநிலங்களைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு தமிழகம் தொடர்ந்து சாதனை படைத்து வருகிறது. இந்த நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசின் புகழ் மகுடத்தில் இன்னொரு சாதனையாக, சாலை விபத்துகளைக் குறைத்ததில் தமிழகம் சாதனை படைத்துள்ளது. இதற்கு எடப்பாடி அரசு, மத்திய அரசின் விருதைப் பெற்று இருப்பது தமிழக மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

2016-ம் ஆண்டு முதல் 34% சாலை விபத்துக்களை தவிர்த்ததோடு, 54% சாலை விபத்தில் இறப்பவர்களை தடுத்து, இந்தியாவிலே சாலை விபத்துகள் குறைந்து காணப்படும் முதல் மாநிலமாக தமிழகம் திகழ்வதாகவும் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி, பாராட்டி உள்ளார்.

“சாலை விதிகள் பற்றியும் விபத்துகள் பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் தமிழகம் முன்னுதாரணமான மாநிலமாக உள்ளது” என்றும் அவர் விருது வழங்கும் விழாவில் பாராட்டித் தள்ளினார். 

இது எப்படி சாத்தியமானது எனப் போக்குவரத்து துறை உயர் அதிகாரிகளிடம் விசாரித்தால், "சாலைகளில் விபத்து ஏற்படுவதை தடுப்பதற்காக தமிழக அரசு, 2018-ம் ஆண்டு முதல் நெடுஞ்சாலையில் இருந்த 2000 மதுபான கடைகளை அகற்றியுள்ளது. சாலை விதிகள் பற்றிய விழிப்புணர்வை பள்ளிப் பாடத்திட்டத்துடன் இணைத்து, மாணவர்களுக்கு கற்பித்து வருகிறது. மற்றும் இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு தலைக்கவசம் அணிவது பற்றியும், சாலை விதிகளை மதிப்பது பற்றியும் காவலர்கள் மூலமாக விழிப்புணர்வுவை மேற்கொண்டு வருகின்றது.

உச்ச நீதிமன்றம் 2020-ம் ஆண்டுக்குள் சாலை விபத்துகளை 50% ஆக குறைக்க வேண்டும் என வலியுறுத்தியது. அதை கருத்தில் கொண்டு, உச்ச நீதிமன்றம் கூறியதை விட குறைத்து 54% உள்ள மாநிலமாக மாற்றினோம். வரும் காலத்தில் சாலை விபத்து பூஜ்ஜிய சதவீதம் உள்ள மாநிலமாக மாற்றுவோம்” என்கிறார்கள்.  

எந்த நேரமும் நாட்டு நலன் பற்றி சிந்திக்கும் எடப்பாடி பழனிசாமியின் தலைமையில் இன்னமும் தமிழகம் எத்தனையோ வெற்றிகளை பார்க்கத்தான் போகிறது.