எடப்பாடி பழனிசாமியின் அடுத்த அதிரடி… புதிய மின்னணுக் கொள்கையில் 100 பில்லியன் டாலர் இலக்கு

தமிழ்நாடுமுதலமைச்சர் திரு. எடப்பாடிமு. பழனிசாமி இன்று தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு மின்னணுவியல் வன்பொருள் உற்பத்திக் கொள்கை – 2020 வெளியிட்டார்கள்.


மின்னணு உற்பத்தியில், தமிழ்நாடு இந்தியாவின் முன்னணி மையமாக உருவெடுத்துவருகிறது. இந்தியாவின் மொத்த மின்னணு உற்பத்தியில், தமிழ்நாட்டின் பங்களிப்பு 16% ஆகும். மேலும், கணினி, மின்னணுவியல்மற்றும் ஒளியியல்பொருட்கள்உற்பத்தியில், அகில இந்திய அளவில், தமிழ்நாடுஇரண்டாவது இடத்தில் உள்ளது.  

கைப்பேசிஉற்பத்தி, கணினிமற்றும் அதன் புறஉபகரணங்கள், தொழில்துறைக்குத் தேவையான மின்னணுபொருட்கள், நுகர்வோர் மின்னணு மற்றும் மின்னணு உதிரிபாகங்கள் போன்ற பொருட்களின் உற்பத்திக்கு வலுவான தளமாக தமிழ்நாடு விளங்குகிறது. ஸ்ரீபெரும்புதூரில் இருந்து ஒரகடம் வரையில்உள்ள மின்னணுவியல் உற்பத்திதடத்தில், சாம்சங், பாக்ஸ்கான், சால்காம்ப், சான்மினா, நோக்கியா சீமென்ஸ் நெட்வொர்க்ஸ் போன்ற முக்கிய நிறுவனங்கள் தங்களது உற்பத்தித் திட்டங்களை நிறுவிஉள்ளன.  

தற்போதுஉள்ள முதன்மை நிலையை மேம்படுத்திக் கொள்ளும் வகையில் மின்னணுவியல் துறையில் புதிய திட்டங்களை ஈர்த்திடவும், இதுவரை இந்தியாவில் இல்லாத செமி கண்டக்டர் புனையமைப்பு மற்றும் மின்னணுப ழுதுபார்த்திடும் பூங்காக்கள் துறைகளில், தமிழ்நாடு தடம் பதித்திடவும் தமிழ்நாடு மின்னணுவியல் வன்பொருள் உற்பத்திக் கொள்கை – 2020 அவசியம் ஆகும். மின்னணு வன்பொருள் உற்பத்திக் கொள்கையின் நோக்கங்கள்

• 2025ம் ஆண்டுக்குள், தமிழ்நாட்டின் மின்னணுவியல் துறையின் உற்பத்தியினை, 100 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்த்துதல்.

• இந்தியாவின் மொத்த மின்னணு ஏற்றுமதியில், தமிழ்நாட்டின் பங்களிப்பினை 25% ஆக உயர்த்துதல்.

• செமி கண்டக்டர் புனையமைப்பு துறையினை தமிழ்நாட்டில் வளர்த்தல்

• 2024ஆம் ஆண்டுக்குள், தமிழ்நாட்டில் மின்னணு வன்பொருள் உற்பத்தித் துறையின் மனிதவளத் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், ஒருலட்சம் நபர்களுக்கு திறன் பயிற்சி அளித்தல்;

மேற்கூறிய நோக்கங்களை அடைவதற்கு ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி திட்டங்களை மேற்கொண்டு ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கச் சூழலை மேம்படுத்துதல் போன்றவை ஆகும். மேலும் இந்த துறையின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில், மின்னணு மின்னணு வன்பொருள் உற்பத்திக் கொள்கையின் முக்கிய அம்சங்களும், சலுகைகளும் வெளியிடப்பட்டுள்ளன.