புயல் ஆய்வுப் பணிகளில் புயல் போன்று பணியாற்றும் எடப்பாடி பழனிசாமி

தமிழகத்தை மிரட்டிவந்த தீவிர நிவர் புயல் இன்று அதிகாலை 3.30 மணியளவில் புதுச்சேரி வடக்கே முழுமையாக கரையை கடந்துவிட்டது. இந்த புயலுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்கூட்டியே எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக, புயலுக்கு சேதங்கள் குறைந்தேபோயின.


செம்பரம்பாக்கம் ஏரியில் தண்ணீர் திறக்கப்பட்ட காரணத்தாலே சென்னை 2015ம் ஆண்டு பெருவெள்ளத்தை சந்தித்தாகக் கூறப்பட்டது. அப்படியொரு நிலைமை வந்துவிடக்கூடாது என்று நேரில் ஆய்வு செய்து தண்ணீரை திறக்கவைத்தார் எடப்பாடி பழனிசாமி.

புயலை சமாளிக்க மீட்பு படையில் இருந்து முப்படைகளும் தயாராக இருந்தது. இதுதவிர முதல்வரின் உத்தரவின் பேரில் அமைச்சர் பெருமக்களும் பம்பரமாக சுழன்றனர்.

பொதுவாக புயல் அடித்தபிறகு, எவ்வளவு சேதம் எனப்தை மதிப்பிட்ட பிறகே முதல்வர் அந்தப் பகுதிக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டு, நிவாரண உதவிகள் கொடுப்பது வழக்கம். ஆனால், இன்று அந்த வழக்கத்தை அடித்து நொறுக்கியிருக்கிறார் முதல்வர் எடப்பாடியார்.

ஆம், புயல் ஓய்ந்ததுமே நேரடியாக கடலூருக்குச் சென்ற முதல்வர் எடப்பாடி வயல்வெளிகளில் இறங்கி ஆய்வுகளை மேற்கொண்டார். விவசாயிகளுக்கு இழப்பீடுகள் வழங்குவதற்கு உறுதியும் அளித்திருக்கிறார்.

அப்புறமென்ன, எடப்பாடியால் எத்தனை இடர்பாடுகளையும் சந்திக்க தமிழகத்தால் முடியும் என்பதுதான் தமிழகம் முழுவதும் பேச்சு.