அரசு மருத்துவமனையில் தடுப்பூசு போட்டுக்கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி... எல்லோரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டுகோள்.

பெரும்பாலான தலைவர்கள் தனியார் மருத்துவமனையில்தான் தடுப்பூசி போட்டுக்கொள்கிறார்கள். ஸ்டாலினும் அப்படித்தான் போட்டுக்கொண்டார்.


இந்த நிலையில், சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவாக்சின் கொரோனா தடுப்பூசியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செலுத்திக் கொண்டு மக்களுக்கு விழிப்புணர்வு உண்டாக்கினார்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசினார். பொது மக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும். குறிப்பாக 60 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.

இந்த நோய்லிருந்து விடுபடுவதற்கு அரசு மருத்துவமனை முதல் சுகாதார மருத்தவமனை வரை அனைத்து இடங்களிலும் தடுப்பூசி போடும் பணி செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் 2,682 இடங்களில் அரசு மருத்துவமனைகளிலும் ஆரம்ப நிலையங்களிலும் இலவசமாக தடுப்பூசி போடப்படுகிறது. தனியார் மருத்துவமனைகளிலும் 924 இடங்களில் தடுப்பூசி போடப்படுகிறது. தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் 3606 இடங்களில் போடப்படுகிறது. மொத்தமாக 36,14,000 தடுப்பூசி பெறப்பட்டுள்ளது.  

45 வயதுக்குட்பட்ட பிற நோய் உள்ளவர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். மக்கள் அனைவரும் பணியின் காரணமாக பல இடங்களுக்கு சென்று வருகிறோம். ஆகையால் நாம் அனைவரும் பாதிப்பில் இருந்து காத்தக் கொள்வதற்கு கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என கூறியிருக்கிறார்.