தமிழக சட்டசபை வரலாற்றில் சாதனை படைத்த எடப்பாடி பழனிசாமி... குவியும் பாராட்டுகள்

ஒருவழியாக தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிட்டன. இப்போதைய அரசின் கடைசி கூட்டத்தொடரும் இன்றோடு முடிவுக்கு வந்துவிட்டது. தேர்தலுக்கு இன்னமும் 40 நாட்களே இருக்கும் நிலையில், சட்டமன்றக் கூட்டத்தொடர் முடிவுக்கு வந்தது.


இந்நிலையில், தமிழக சட்டசபையில் பேசிய முதல் அமைச்சர் பழனிசாமி, அரசுக்கு துணையாக இருந்த துணை முதல் அமைச்சர் மற்றும் அமைச்சர்களுக்கு நன்றி தெரிவித்து கொண்டார். முன்னாள் முதல் அமைச்சர்களான மறைந்த எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாவின் கனவை நனவாக்கும் விதமாக மீண்டும் ஆட்சி அமைப்போம் என்றும் அவர் கூறினார்.

தமிழக சட்டசபையின் சபாநாயகர் தனபால் பேசும்பொழுது, அவை நடைபெற்ற அனைத்து நாட்களும் வந்த ஒரே முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமிதான் என கூறினார். காமராஜர் தொடங்கி எம்.ஜி.ஆர். வரையிலும் அனைத்து முதல்வர்களும் சட்டசபைக் கூட்டத்தை புறக்கணித்திருக்கிறார்கள். ஆனால், ஒரு நாள்கூட எடப்பாடியார் புறக்கணிக்கவில்லை என்பது குறிப்பிடத்தகக்து.

அதேபோன்று, சட்டசபையில் அதிக கேள்விகள் எழுப்பியவர் கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் பிரபு என்றும் அவர் கூறினார். அதிக பதில்கள் சொன்னவர் அமைச்சர் தங்கமணி என்றும் தெரிவித்தார்.

இதையடுத்து ஜெயலலிதா சமாதிக்குச் சென்று அ.தி.முக.வினர் மீண்டும் ஆட்சி அமைப்போம் என்று சபதம் எடுத்துக்கொண்டனர்.