காஷ்மீரில் பலியான தமிழக ராணுவ வீரர் குடும்பத்துக்கு அரசு வேலை வழங்கிய எடப்பாடி பழனிசாமி. அரசு மரியாதையுடன் உடல் தகனம்.

திருவாரூா் மாவட்டம் நீடாமங்கலம் புள்ளவவராயன்குடிக்காடு கிராமத்தைச் சோந்தவா் திருமூா்த்தி.


ஜம்மு-காஷ்மீரில் எல்லை பாதுகாப்புப் படை வீரராகப் பணியாற்றி வந் திருமூர்த்தி கடந்த 25-ஆம் தேதியன்று எதிர்பாராத விதமாக அவருடைய துப்பாக்கி வெடித்ததில் பலத்த காயமடைந்து சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.

இதையடுத்து, திருமூர்த்தியின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்குவதற்கு ஆணை பிறப்பித்தார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மேலும், திருமூர்த்தியின் உடலுக்கு அரசு சார்பில் மரியாதை அளிக்கவும் உத்தரவு போட்டார்.

திருமூர்த்தியின் உடல் இன்று விடியற்காலை 5 மணிக்கு அவரது சொந்த கிராமத்திற்கு எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் கொண்டு வந்தனர் திருமூர்த்தியின் உடலுக்கு உணவுத்துறை அமைச்சர் காமராஜ், மாவட்ட ஆட்சியர் ஆனந்த், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் துரை உள்ளிட்ட அதிகாரிகள், கிராம பொது மக்கள் , மற்றும் உறவினர்கள் , அஞ்சலி செலுத்தினர்.

முதல்வர் உத்தரவுப்படி, தமிழக வீரரின் உடல் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் சொந்த ஊரில் தகனம் செய்யப்பட்டது. மக்களும் திரளாக திரண்டுவந்து அஞ்சலி செலுத்தினார்கள்.