வீடு இல்லாதோருக்கு அரசே இடம் வாங்கி காங்கிரீட் வீடு கட்டித்தரும்... எடப்பாடி பழனிசாமி வாக்குறுதியால் ஆனந்தத்தில் ஏழை மக்கள்.

தங்களுக்கு சொந்தமாக ஒரு வீடு வேண்டும் என்பதுதான் பெரும்பாலான ஏழைகளின் கனவு. பெரும்பாலும் அந்த கனவு பலிப்பதே இல்லை. கனவு கனவாகவே போய்விடுவதுதான் வாடிக்கை. ஆனால், ஏழைகளின் கனவை நிறைவேற்றுவதற்க் முன்வந்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.


புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் விஜயபாஸ்கரை ஆதரித்து இலுப்பூர் பகுதியில் முதல்வர் பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: ஏப்ரல் 1-ம் தேதி முதல் விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. பெண்களின் குடும்ப பணி சுமையை குறைக்க குடும்பத்திற்கு அம்மா வாஷிங் மெஷின் வழங்கப்படும். எல்லா வீடுகளுக்கும் 6 காஸ் சிலிண்டர் விலையில்லாமல் கொடுக்கப்படும். மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை வழங்கப்படும்

மேட்டூர் அணையிலிருந்து வெளிவரும் உபரி நீரை ஏரிகளுக்கு நிரப்புவோம் என கொடுத்திருந்த வாக்குறுதியை நிறைவேற்றியது அதிமுக அரசுதான். தமிழகத்தில் கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வந்தவர் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர். இவரின் சிறப்பான பணிக்கு மத்திய அரசே சான்று அளித்துள்ளது. புதுக்கோட்டையில் மருத்துவக் கல்லூரியையும் திறந்துள்ளார். மக்களின் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றியுள்ளார்.

அரசு நிறைவேற்றிய திட்டங்களை பற்றி அறியாமல் தேர்தல் அறிக்கையாக வெளியிட்டுள்ளார் ஸ்டாலின். அனைத்து வீடுகளுக்கும் கேபிள் டிவி இணைப்பு விலையில்லாமல் வழங்கப்படும். முதியார் உதவித்தொகை உயர்த்தி தரப்படும். தமிழகத்தில் ஏழை சாதி இல்லாத நிலை உருவாக்கப்படும்.

ஏழைகளுக்கு வீடு இல்லை என்ற நிலையை மாற்றி, சொந்த வீடு இல்லாதவர்களுக்கு கிராமப்புறங்களில் அரசே இடம் வாங்கி கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

முதல்வரின் பேச்சு ஏழை, எளிய மக்களுக்கு மிகுந்த நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறது.