அடுத்து இன்பநிதியா.. ? ஸ்டாலினுக்கு நச்சென்று கேள்வி எழுப்பும் எடப்பாடி பழனிசாமி.

கருணாநிதி சக்கர நாற்காலியில் இருந்து ஆட்சி புரிந்த கடைசி நொடி வரையிலும், தன்னுடைய பதவியை ஸ்டாலினுக்கு விட்டுக் கொடுக்கவே இல்லை. அதற்கான தகுதி ஸ்டாலினுக்கு வரவில்லை என்றுதான் சொல்லப்படுகிறது.


இந்த விவகாரத்தைத்தான் தேர்தல் பரப்புரையின் போது பேசினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. திருவண்ணாமலையில் அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, ‘கருணாநிதி தன் மகனான ஸ்டாலினை நம்பி கட்சியை ஒப்படைக்கவில்லை, நாட்டு மக்கள் அவரை எப்படி நம்புவார்கள்?‘ என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திருவண்ணாமலை நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் ஜாதி மதம் பார்க்காத இயக்கம் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம். ஸ்டாலின் ஸ்ரீரங்கம் கோவிலுக்கு சென்றார். அங்கு கையில் கொடுக்கும் விபூதியை கொட்டி விடுகிறார். குங்குமம் வைத்தால் அழித்து விடுகிறார். ஆனால் இப்போது வேலை கையில் பிடிகிறார். இவ்வாறு இரட்டை வேடம் போடும் திமுக, வாரிசு அரசியல் நடத்தி வருகிறது.

இதில் கருணாநிதிக்கு பிறகு ஸ்டாலின், அவருக்கு பிறகு உதயநிதி, பிறகு இன்பநிதி இவர்கள் குடும்பமே அரசியல் அதிகாரம் அனுபவிக்கவும் கொள்ளை அடிப்பதற்காகவும் திமுக கட்சி நடத்துகிறது. கட்சி இல்லை கார்ப்ரேட் கம்பெனி நடத்தி வருகிறார்கள் என்றும் குற்றம் சாட்டினார்.