எடப்பாடி பழனிசாமி தேர்தலுக்குத் தயாராகிக்கொண்டிருக்கிறார்.! அ.தி.மு.க. பொதுக்குழுக் கூட்டம் விரைவில் .!

வரும் 2021 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.வின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார் இன்றைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அதோடு, அ.தி.மு.க.வை வழிநடத்துவதற்கு ஒரு வழிகாட்டுதல் குழுவும் அமைக்கபட்டுள்ளது.


இந்த வழிகாட்டுக் குழுவுக்கு போதிய அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும். இந்த குழுவின் மூலம்தான் வேட்பாளர்கள் தேர்வு, கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை, போன்றவை நடைபெறும். 11 பேர் கொண்ட வழிகாட்டு குழுவுக்கு அங்கீகாரம் கொடுக்க மூத்த தலைவர்கள் முடிவு செய்துள்ளனர். 

ஆனால் பொதுக்குழு விதியை உருவாக்கி தீர்மானம் கொண்டு வந்தால் மட்டுமே அங்கீகாரம் கொடுக்க முடியும். அதன்பிறகு, இந்த வழிகாட்டுதல் குழு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு, இறுதி முடிவுகளை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் எடுப்பார்கள்.

எனவே இந்த அரசியல் சூழ்நிலையில் அ.தி.மு.க. பொதுக்குழுவை வருகிற டிசம்பர் மாதம் முதல் வாரத்திலேயே கூட்டுவதற்கு முடிவுசெய்யப்பட்டுள்ளது. இந்த பொதுக்குழுவில் கிட்டத்தட்ட 4 ஆயிரம் உறுப்பினர்கள் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.