எடப்பாடி பழனிசாமிதான் எங்களுக்கும் முதல்வர்... பா.ஜ.க.வின் எல்.முருகன் டோட்டல் சரண்டர்.

கூட்டணி குறித்து கட்சி மேலிடம்தான் பதில் சொல்ல வேண்டும். கூட்டணியின் வேட்பாளரையும் கட்சி மேலிடம்தான் சொல்லும் என்று எடப்பாடி பழனிசாமியை ஏற்றுக்கொள்ளாமல் தவிர்த்துவந்த பா.ஜ.க. தலைவர் எல்.முருகன் இன்று சேலத்தில் பேசியபோது, டோட்டலாக சரண்டர் ஆகியிருக்கிறார்.


பட்ஜெட் குறித்துப் பேசிய எல்.முருகன், ‘தமிழகத்துக்கு சிறப்பு கவனம் செலுத்தி, மத்திய நிதி நிலை அறிக்கையில் திட்டங்கள் அறிவிக்கப்படுள்ளது. மத்திய நிதி நிலை அறிக்கையில் ஏராளமான திட்டங்கள் இருந்தும், திமுக தலைவர் ஸ்டாலினுக்கு அதனை வரவேற்க மனமில்லை’ என்று குற்றம் சாட்டினார். 

தேர்தல் கூட்டணி குறித்து கேட்டபோது, ‘வரும். சட்டப்பேரவைத் தேர்தலில் அ.தி.மு.க.வுடன் இணைந்து தேர்தலை சந்திக்க உள்ளதாகவும், நாடாளுமன்ற தேர்தலில் அமைக்கப்பட்ட கூட்டணியே தொடர்கிறது. பெரிய கட்சியான அதிமுக, முதலமைச்சர் வேட்பாளரை அறிவித்திருப்பதை வரவேற்கிற்கிறேன். முதல்வர் எடப்பாடி பழனிசாமிதான் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் என்று தெரிவித்தார்.

இப்போதாவது உண்மை புரிந்து பேசுகிறார்களே என்ற வகையில் சந்தோஷம்தான்.