முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழ் மொழிக்கு என்ன செய்யவேண்டுமோ அதனை சரியாக செய்திருக்கிறார்.!

தமிழ் மொழிக்கு என்ன செய்யவேண்டுமோ, அதனை சரியாக செய்திருக்கிறார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி.


ஆம், உத்தர பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் மத்திய அரசின் தொல்லியல்துறை சார்பில் பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா தொல்லியல் கல்லூரி இயங்கி வருகிறது. அங்கு தொல்லியல் துறை சார்ந்த 2 ஆண்டு முதுகலை பட்டயப் படிப்புக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. 

அதில், தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டு இந்திய வரலாறு, மானுடவியல் மற்றும் சமஸ்கிருதம், பாலி, அரபு ஆகிய மொழிகளில் முதுகலைப் பட்டம் பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இது தமிழகத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

உடனடியாக, தொல்லியல் பட்டயப் படிப்புக்கான தகுதியில் தமிழ்மொழியையும் சேர்க்குமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் பழனிசாமி கோரிக்கை விடுத்து கடிதம் எழுதியிருந்தார். 

முதல்வர் அனுப்பிய கடிதத்தைத் தொடர்ந்து, மத்திய தொல்லியல் துறை பட்டயப் படிப்பில் செம்மொழியான தமிழை சேர்த்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. தன்னுடைய கோரிக்கை உடனடியாக நிறைவேற்றப்பட்டதும், உடனடியாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பிரதமருக்கு கடிதம் எழுதி நன்றி கூறியிருக்கிறார்.