தேர்தல் பிரசாரத்தில் இறங்குகிறார் எடப்பாடி பழனிசாமி… கூட்டணிக் கட்சிகள் அதிர்ச்சி

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி போன்ற பல பிரச்னைகளை முடித்துவிட்டுத்தான் எடப்பாடி பழனிசாமி பிரசாரத்துக்குச் சென்றார். மீண்டும் அந்த குழப்பம் ஏற்பட்டுவிடக் கூடாது என்று, இப்போதே பிரசாரத்துக்குத் தயாராகிவிட்டார் எடப்பாடி பழனிசாமி.


ஒவ்வொரு தேர்தலிலும் எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பெரியசோரகை கரிய பெருமாள் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு தேர்தல் பிரசாரத்தை தொடங்குவது வழக்கம். அதன்படி முதலில் பெரிய சோரகை செல்கிறார்.

அங்கு சமீபத்தில் கும்பாபிஷேகம் நடந்த கரிய பெருமாள் பெருமாள் கோவிலில் சாமி தரிசனம் செய்து அனுமதி வாங்கியதும் தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார். எடப்பாடி பழனிசாமிக்காக பிரத்யேக பிரசார வாகனம் தயார் செய்யப்பட்டுள்ளது.

முதலில் எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சீரங்கனூர், இருப்பாளி, வேலநாயக்கன்பாளையம், ஆலச்சிபாளையம், எட்டி குட்டைமேடு ஆகிய இடங்களில் மினி கிளினிக்கை திறந்து வைத்து சிறப்புரையாற்றுகிறார். தனது சொந்த ஊரான சிலுவம்பாளையம் செல்லும் அவர் அங்கு ஒரு மினி கிளினிக்கை திறந்து வைப்பதுடன் பிரசாரத்தையும் தொடங்குகிறார்.

திடீரென தங்களை கலந்து ஆலோசிக்காமல் எடப்பாடி பானிசாமி, பிரசாரம் மேற்கொள்வதையடுத்து, கூட்டணிக் கட்சிகள் அதிர்ந்து நிற்கிறார்கள். வேறு வழியில்லாமல் அ.தி.மு.க.வுடன் சரண் அடையும் சூழலை உருவாக்கிவிட்டார் எடப்பாடி பழனிசாமி.