சொன்னதை செய்தார் எடப்பாடி பழனிசாமி.. மாணவர்களுக்கு இலவச டேட்டா கார்டு... இன்னும் என்னவெல்லாம் சலுகைகளோ..?

மாணவர்களுக்கு கேட்டதை மட்டுமல்ல, கேட்காததையும் கொடுத்தவர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. கொரோனா தொற்று காலத்தில் இருந்து ஏகப்பட்ட சலுகைகளை அள்ளிக் கொடுத்த எடப்பாடி பழனிசாமி, இன்று ஏற்கனவே சொன்னபடி இலவச டேட்டா கார்டு கொடுத்து அசத்தினார்.


இப்போது, கொரோனா பெருந்தொற்று காரணமாக கல்லூரிகள் மூடப்பட்டுள்ள நிலையில், கல்லூரி மாணவர்களுக்கு கல்வி நிறுவனங்கள் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகளை நடத்தி வருகின்றன. இந்த வகுப்புகளில் வீட்டில் இருந்தவாறு மாணவர்கள் பங்கேற்று, தங்களுடைய பாடத்திட்டங்களை படித்து வருகின்றனர்.

இணையவழி வகுப்புகளில் மாணவர்கள் கலந்துகொள்ள ஏதுவாக அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள், என்ஜினீயரிங் கல்லூரிகள் மற்றும் கல்வி உதவித்தொகை பெறும் சுயநிதி கல்லூரிகளில் படிக்கும் 9 லட்சத்து 69 ஆயிரத்து 47 மாணவர்களுக்கு ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான 4 மாதங்களுக்கு ‘2 ஜி.பி. தரவு' (‘2 ஜி.பி. டேட்டா') வழங்கப்படும் என்றும், எல்காட் நிறுவனத்தின் மூலமாக விலையில்லா ‘தரவு அட்டைகள்' (‘டேட்டா கார்டு') வழங்கப்படும் என்றும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த மாதம் 10-ந் தேதி அறிவித்து இருந்தார்.

அதன்படி, கல்லூரி மாணவர்களுக்கு ‘2 ஜி.பி. டேட்டா' வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைத்தார். சொன்னதை அப்படியே நிறைவேற்றித் தரும் எடப்பாடி பழனிசாமி, தேர்தல் அறிக்கையில் இன்னும் என்னவெல்லாம் வைத்திருப்பாரோ..?