ரஜினிகாந்த்துக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து..!

ரஜினிகாந்த் அரசியல் கட்சி ஆரம்பிக்க இருப்பதாக அறிவித்தபிறகும், அவரை போட்டி அரசியல்வாதியாகக் கருதாமல் பிறந்த நாளுக்கு வாழ்த்து கூறி மக்களை ஆச்சர்யப்பட வைத்திருக்கிறார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி.


தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்றைய தினமே வாழ்த்து அனுப்பிவிட்டார். இன்றைய தினம் இந்திய பிரதமர் நரேந்திரமோடியும், தமிழக எதிர்க்கட்சித்தலைவர் ஸ்டாலினும் ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

இந்த நிலையில், அன்பு என்பது கட்சிக்கு அப்பாற்பட்டது என்பதை நிரூபிக்கும் வகையில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிறந்தநாள் வாழ்த்துகூறி ட்வீட் செய்திருக்கிறார்.

அவரது ட்வீட்டில், திரு.ரஜினிகாந்த் அவர்களுக்கு நீண்ட ஆயுளுடனும் ஆரோக்கியத்துடனும் வாழ வேண்டும் என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்கள் உளமார்ந்த வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.