செம ஆப்பு! ஒரே நாளில் ஆயிரக்கணக்கான அரசுப் பள்ளி ஆசிரியர்கள் பணிநீக்கம்! கதற விடும் எடப்பாடி!

வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்களை பணி நீக்கம் செய்து எடப்பாடி அரசு அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.


பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், மத்திய அரசு பணியாளர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும், ஊதிய உயர்வு நிலுவை தொகையை கொடுக்க வேண்டும் என்பது தான் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் பிரதானமான கோரிக்கையாகும்.

 

   ஆனால் இந்த மூன்று கோரிக்கையையும் ஏற்கவே முடியாது என்று பணியாளர் நலத்துறையை கவனித்து வரும் அமைச்சர் ஜெயக்குமார் இன்று பிற்பகல் திட்டவட்டமாக ஒரு அறிக்கையை வெளியிட்டார். இதே போல் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் கூட அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு மட்டுமே அரசின் வருவாயை சம்பளமாகவும், ஓய்வூதியமாகவும் கொடுக்க முடியாது என்று கூறிவிட்டார்.

 

   மேலும் வேலை நிறுத்தத்தை முடித்துக் கொண்டு பணிக்கு திரும்பவில்லை என்றால் நடவடிக்கை உறுதி என்றும் ஜெயக்குமார் எச்சரித்திருந்தார். இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தத்தை திரும்ப பெறுவது குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை.

 

   இதனை தொடர்ந்து எடப்பாடி அரசு தனது அதிரடி நடவடிக்கையை தொடங்கியுள்ளது. அதன்படி சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு கைதான ஆசிரியர்களை முதற்கட்டமாக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிடப்பட்டு வருகிறது. மாவட்டந்தோறும் அந்தந்த கல்வி அதிகாரிகள் சிறையில் உள்ள ஆசிரியர்களை கணக்கெடுத்து பணி இடை நீக்கம் செய்து வருகின்றனர்.


அதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் சிறையில் இருக்கும் ஆசிரியர்கள் 19 பேர் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கரூர் மாவட்டத்தில் ஆசிரியர்கள் 14 பேரும், திருவண்ணாமலையில் ஆசிரியர்கள் 8 பேரும் பணியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளனர். கிருஷ்ணகிரியில் ஒரே நாளில் 36 ஆசிரியர்களை பணியில் இருந்து நீக்கியுள்ளனர்.

 

   விழுப்புரம் மாவட்டத்தில் 20 பேரும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரத்திலும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு கைதான ஆசிரியர்களை பணியிடை நீக்கம் செய்து உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு சிறையில் இருப்பதுடன் தற்போது பணியும் போயுள்ளதால்ஆசிரியர்கள் கதறும் நிலை ஏற்பட்டுள்ளது.