அ.தி.மு.க.வின் 49வது ஆண்டுவிழாவை முன்னிட்டு, தமிழக முதல்வரும் அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிச்சாமி தன்னுடைய சொந்த கிராமமான சிலுவம் பாளையத்தில் கட்சிக் கொடியை ஏற்றி சிறப்பித்து இருக்கிறார்.
எடப்பாடி பழனிச்சாமி தன்னுடைய சொந்த கிராமமான சிலுவம் பாளையத்தில் கட்சிக் கொடியை ஏற்றி சிறப்பித்தார்!
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் தாயார் தவசாயி அம்மாள் காலமானதை தொடர்ந்து, குடும்ப சடங்குகள் இன்னமும் மீதமிருப்பதால், சென்னையில் நடைபெறும் விழாவில் கலந்துகொள்ள இயலாத சூழல் என்பதால், சிலுவம்பாளையத்தில் கட்சி விழாவை கொண்டாடினார்.
முதல்வர் கொடியேற்றுகிறார் என்ற செய்தி அறிந்ததும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் குவிந்துவிட்டனர். முதல்வரின் தாயார் மறைந்து சில நாட்களே ஆன நிலையில் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டங்கள் தவிர்க்கப்பட்டன. நிரந்தர முதல்வர் எடப்பாடியார் வாழ்க, மீண்டும் வேண்டும் எடப்பாடி யார் என்ற கோஷங்கள் மட்டும் அவர் வரும்போது ஒலித்தன.
பிரத்யேகமாக அமைக்கப்பட்டிருந்த மேடையேறிய எடப்பாடி அங்கே வைக்கப்பட்டிருந்த எம்ஜிஆர் ஜெயலலிதா உருவ படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்திவிட்டு அ.தி.மு.க. கொடிக் கம்பத்தில் தயாராக இருந்த கொடியை ஏற்றி, இரட்டை விரலை காட்டினார்.
ஒரு சாதாரண தொண்டனாக எந்த ஊரில் 1985 ஆம் ஆண்டு அதிமுக கொடி கம்பத்தை நட்டு அதில் கொடி ஏற்றினாரோ... அதே கொடிக்கம்பத்தில் அதே தொண்டன் இந்த நாட்டின் முதல்வராக இருந்து அதிமுகவின் 49 வது ஆண்டு விழாவுக்காக கொடியேத்தியிருக்கார் என்று மக்கள் சந்தோஷப்பட்டனர்.