எடப்பாடியை கதறவிட்டாரா மோடி..?!

எடப்பாடி டெல்லிக்குப் போய் நிவாரண உதவி கேட்ட நேரத்தில், சேலத்தில் இரண்டு நாட்க்ள் என்ன செய்தீர்க்ள் என்றும், கூட்டணி குறித்தும் மோடி பேசினாராம். இதனால் சொன்னதை எல்லாம் செய்கிறோம் என்று தலையாட்டும் நிலைக்குத் தள்ளப்பட்டாராம் எடப்பாடி!



1,500 கோடி ரூபாய் இடைக்கால நிவாரணம் கேட்டிருக்கிறோம் என்பதை மட்டும் செய்தியாளர்களிடம் தெரிவித்த எடப்பாடி, உள்ளே வேறு என்னவெல்லாம் நடந்தது என்பதை சொல்லவில்லை. எடப்பாடியை மோடி கதறவிட்டதாக சொல்கிறார்கள்.


கஜா புயல் டெல்டாவை கலங்கடித்த நேரத்தில் சேலத்தில் இருந்தார் எடப்பாடி. எதிர்பார்த்ததைவிட டெல்டா பகுதியில் கடுமையான பாதிப்பு என்று தெரிந்தபிறகும் சேலத்திலே இருந்தார்.

ஸ்டாலின் போய் பார்வையிட்டதும்தான் எடப்பாடிக்கு விழிப்பு வந்தது. அதற்குள் தி.மு.. தரப்பு மக்களை நன்றாகவே வசியம் செய்துவிட்டது.. ‘இன்னமும் உங்க அமைச்சர்கள் வரலையா...?’ என்று உசுப்பேற்றவே, அடுத்துவந்த ஓ.எஸ்.மணியனை ரவுண்டுகட்டி விரட்டினர். இதையடுத்து மற்ற அமைச்சர் பெருமக்களும் சிக்கலான பகுதிக்கு செல்வதற்கு தயக்கம் காட்டினார்கள்.

முதல்வராக இருப்பதால் போகாமல் இருக்கவே முடியாது என்பதால், ஒரு வழியாகப் புறப்பட்டார் எடப்பாடி. சாலையில் போனால் சிக்கல் வரலாம் என்று சில அறிவுஜீவிகள் சொல்லவே, ஹெலிகாப்டரில் போய் அத்தனை தமிழர்களின் சாபத்தையும் வாங்கிக்கொண்டார்.

முதல்வர் வரும் வழியை மறிப்பதற்கு மக்கள் தயாராக இருக்கிறார்கள் என்று சொல்லப்படவே, பல்வேறு கிராமங்களில் சிக்கலான ஆசாமிகளை எல்லாம் போலீஸார் கைது செய்தனர். ஏற்கெனவே புயல் சோகத்தில் இருந்த மக்கள், இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையைப் பார்த்து அதிர்ந்தே போனார்கள். இந்த விவகாரம் டெல்டா முழுவதும் பரவவவே, எடப்பாடி எங்கு வந்தாலும் மறியல் என்ற அளவுக்கு நிலைமை முற்றிப் போனது. அதனால் மழையை காரணம் காட்டி திரும்பிப்போனார்.

சென்னைக்குப் போனதும் ஆயிரம் கோடி நிதியை இடைக்கால நிவாரணத் தொகையாக அறிவித்தார். அப்போதுதான் சிக்கல் ஆரம்பித்தது. ஆம், கஜானாவில் காசு இல்லை.

இருந்த பணத்தை எல்லாம் டெண்டர் விட்டு எடுத்துவிட்டதால், அவசரத்துக்கு செலவழிக்க பணம் இல்லாமல் தடுமாறியது அரசு. இதைத்தான் தம்பிதுரையும் சொல்லியிருந்தார். அதனால் வேறு வழியே இல்லாமல் மத்திய அரசிடம் சென்று கேட்பதற்குத் தயாரானார்.

ஆனால், இன்னமும் பல கிராமங்களுக்குள் செல்லவே முடியாத நிலை. ஆனாலும் குத்துமதிப்பாக கணக்குப் போட்டு 15 ஆயிரம் கோடி நிதி கேட்டார்.

எடப்பாடியை சந்தித்த மோடி கஜா விபரங்களை முழுமையாக கேட்டுக்கொண்டாராம். அதன்பிறகு, புயலுக்குப் பிறகு நீங்க சேலத்துல என்ன செஞ்சீங்க..? முக்கிய மீட்டிங் நடந்ததாமே? பா...வுடன் கூட்டணி வேண்டாம்னு யாரோ சொல்றாங்களாமே என்றெல்லாம் எங்கெங்கோ பேச்சு போயிருக்கிறது.. ஒரு கட்டத்தில் எடப்பாடி கதறிவிட்டாராம்.

நீங்க என்ன சொன்னாலும் கேட்கிறோம்... உடனே நிதி மட்டும் குடுங்க, இல்லைன்னா தமிழகத்தில் தலை காட்டவே முடியாது என்று கெஞ்சினாராம். அதன்பிறகே பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்ததாம்.

ம்.. நெஞ்சை நிமித்தி கேட்க வேண்டிய பணத்தை இப்படி குனிஞ்சு கேட்டா என்னத்தைக் கிடைக்கப்போகுது?