இன்று பயன்பாட்டில் கருப்பு எள், வெள்ளை எள் இருந்தாலும், கருப்பு எள்ளில்தான் அதிக சத்துக்கள் இருப்பதாக அறியப்படுகிறது. காப்பர், கால்சியம், மக்னீஷியம், பாஸ்பரஸ், வைட்டமின், புரோட்டீன் போன்ற சத்துக்கள் இருக்கின்றன.
எலும்புகளின் வலிமையை அதிகரிக்க எள் சாப்பிடுங்க !!
·
எலும்புகளின் அடர்த்தியை அதிகப்படுத்தவும் பற்கள், நகங்கள் வலுவடையவும் எள் உபயோகப்படுகிறது.
·
எள்ளும் வெல்லமும் சேர்த்து செய்யப்படும் எள்ளுருண்டை, குழந்தைகளுக்கு நல்ல தின்பண்டமாகவும் சிறந்த ஜீரண மருந்தாகவும் இருக்கிறது.
·
உடல் மினுமினுப்பு, பளபளப்பு கிடைக்கவும் எள் பயன்படுகிறது. இதனை பொடியாக அல்லது நல்லெண்ணெய்யாக தேய்த்துக் குளிப்பது நல்லது.