பிரக்கோலி சாப்பிடுங்க, ஆரோக்கியமா இருங்க

பச்சை காலிஃப்ளவர் போன்று காணப்படும் பிரக்கோலி இத்தாலி நாட்டைச் சேர்ந்த உணவுப் பொருளாகும். இதில் இருக்கும் குளுக்கோராஃபின் எனும் ஊட்டச்சத்து புற்று நோய் வராமல் தடுக்கக்கூடியது என்கிறார்கள் மருத்துவ ஆய்வாளர்கள்.


·         வைட்டமின் சி, நார்ச்சத்து, இரும்புச்சத்து, வைட்டமின் , பொட்டாசியம், கால்சியம், கரோடின் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிரம்பியிருப்பதால் இதயநோய், புற்றுநோய் வராமல் தடுக்கும் தன்மை உடையது.

·         பிரக்கோலியில் இருக்கும் சல்ஃபேன் எனும் கலவை எலும்பை வலுவாக்குகிறது. அதனால் எலும்பு மெலிவு நோய் எனப்படும் ஆஸ்டியோபொராசிஸ் வராமல் தடுக்கிறது.

·         கல்லீரல் செயல்தன்மையை அதிகரிக்கும் பண்புகளும் இந்தக் காய்க்கு இருப்பது தனிச்சிறப்பாகும்.

·         பிரக்கோலி நார்ச்சத்து நிரம்பியது என்பதால் ரத்தத்தில் உள்ள கொழுப்புச்சத்தைக் குறைக்கிறது.