உங்கள் மனசுக்குப் பிடித்தவரை வசப்படுத்த வேண்டுமா? ராசிப்படி அவர்கள் குணத்தை தெரிந்துகொண்டு செயல்படுத்துங்கள், சக்சஸ்தான்!

மேஷம் : மேஷ ராசிக்காரர்களை பொறுத்தவரை விடாமுயற்சியே அவர்களுக்கு விஸ்வரூப வெற்றியை தேடி தரும்.


கிடைக்கும் சிறு வாய்ப்பையும் சரியாக பயன்படுத்தும் அறிவுக்கூர்மை இவர்களிடம் உண்டு. மேலும், இந்த குணம் மற்றவர்களை இவர்கள் வசம் ஈர்க்கும் வகையில் இருக்கும்.

ரிஷபம் : ரிஷப ராசிக்காரர்கள் எந்த ஒரு விஷயத்தையும் செய்வதற்கு காலம் நேரம் எல்லாம் பார்க்க மாட்டார்கள். மற்றவர்களுக்கு ஏதாவது ஒரு பிரச்சனை வந்து அதற்கு இவர்கள் உதவ வேண்டும் என்று நினைத்தால் இவர்களை யாராலும் தடுக்க முடியாது. இந்த குணமானது பலரை இவர்கள் வசம் ஈர்க்கும்.

மிதுனம் : மிதுன ராசிக்காரர்களை பொறுத்தவரை எதையும் நன்கு ஆராய்ந்து சிந்தித்து செயல்படும் குணம் உடையவர்கள் இவர்கள். மேலும், இப்படி இருப்பதாலேயே பலர் இவர்கள் வசம் ஈர்க்கப்படுவர்.

கடகம் : கடக ராசிக்காரர்கள் சற்று தாராள மனம் கொண்டவர்களாக இருப்பார்கள். அதேபோல இவர்கள் பிறரின் கருத்துகளை பொறுமையாக கேட்கும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

சிம்மம் : கடினமான விஷயத்தையும் துணிச்சலாக செய்ய சிம்ம ராசிக்காரர்களால் தான் முடியும். இவர்கள் இப்படி பல அசாத்தியமான செயல்களை செய்வதை கண்டு பலர் இவர்கள் மீது அன்பு கொள்வார்கள். இவர்களை பொறுத்தவரை முடியாது என்ற ஒரு விஷயமே கிடையாது.

கன்னி : கன்னி ராசிக்காரர்கள் பொதுவாக அன்பாக இருப்பார்கள். அதோடு எதையும் அன்போடு பிறருக்கு கற்றுக்கொடுப்பார்கள். இவர்கள் தினம்தினம் எதையாவது புதிதாக கற்றுக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

துலாம் : துலாம் ராசிக்காரர்கள் எப்போதும் நியாயத்தின் பக்கம் நிற்பவர்கள். நியாயம் கேட்டு இவர்களை நாடி வருபவர்களுக்கு எப்போதும் இவர்கள் நியாயம் தருவார்கள்.

விருச்சிகம் : விருச்சிக ராசிக்காரர்களுக்கு பொதுவாக தோற்றம் நன்றாக இருக்கும். இவர்கள் தோற்றம் காரணமாகவே பிறர் ஈர்க்கப்படுவர். அதோடு இவர்கள் எப்போதும் தங்கள் உடல் நிலை மற்றும் தோற்றத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள்.

தனுசு : தனுசு ராசிக்காரர்கள் எப்போதும் ஒரு செயலை தொடங்குவதற்கு முன்பும் பல முறை யோசிப்பார்கள். ஆனால், ஒன்றை செய்ய வேண்டும் என்று முடிவெடுத்துவிட்டால் அதை செய்து முடித்தே தீருவார்கள். இந்த குணமானது பிறரை கவரும் வகையில் இருக்கும்.

மகரம் : மகர ராசிக்காரர்கள் எப்போதும் நண்பர்களுக்கு இல்லை என்று சொல்ல மாட்டார்கள். இவர்களின் இந்த குணமானது பிறரை கவரும் வண்ணம் இருக்கும். அதேபோல இவர்கள் கடினமாக உழைக்கக்கூடியவர்கள்.

கும்பம் : கும்ப ராசிக்காரர்கள் பல நேரங்களில் பொறுமையின் சிகரமாக விளங்குபவர்கள். இந்த குணமானது பிறரை கவரும். எத்தகைய பிரச்சனையாக இருந்தாலும் அதனை நிதானமாக பொறுமையோடு அணுகுவார்கள். அதேபோல இவர்கள் சிறந்த கற்பனையாளர்கள்.

மீனம் : மீன ராசிக்காரர்கள் பொதுவாக தனக்கு மட்டும்தான் எல்லாம் கிடைக்க வேண்டும் என்று எண்ணாமல் எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்று என்னும் பொதுநல பண்பு கொண்டவர். இந்த குணமானது பிறரை கவரும்.