ரேசன் கார்டை காட்டினால் போதும்..! கூட்டுறவு வங்கியில் ரூ.50 ஆயிரம் கிடைக்கும்..! அமைச்சரின் அதிரடி அறிவிப்பு!

ரேஷன் கார்டை காண்பித்து ரூபாய் 50,000 வரை தனிநபர் கூட்டுறவு வங்கிகளின் மூலம் கடன் பெற்றுக் கொள்ளலாம் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ அதிரடி அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.


உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் நாடு முழுவதிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொது முடக்கம் அறிவிக்கப்பட்ட நாள் முதல் பலரும் தங்களுடைய வாழ்வாதாரத்தை இழந்து அன்றாட உணவிற்கே கஷ்டப்படும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதே நிலைமைதான் தமிழகத்திலும் பல இடங்களில் நிலவி வருகிறது. இதையடுத்து தமிழக அரசு குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் வழங்கியது.

மேலும் கடந்த மூன்று மாதங்களாகவே ரேஷன் கடைகளில் உணவுப் பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் விவசாயம் சிறுதொழில் செய்வோர் ஆகியோருக்கு இந்த பொது முடக்கத்தில். இருந்து தளர்வு அளித்து அவர்களின் வாழ்வாதாரத்தை மீட்டு தந்துள்ளது. இருப்பினும் பல்வேறு துறையை சேர்ந்த மக்கள் ஊரடங்கு உத்தரவு முற்றிலும் தளர்த்தப்பட்ட உடன் தான் தங்களுடைய இயல்பு நிலைக்கு திரும்ப முடியும் என்று கூறியுள்ளனர். இதனையடுத்து கடும் பொருளாதார வீழ்ச்சியில் சிக்கி பொதுமக்கள் ஒவ்வொருவரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

இதனை கருத்தில் கொண்டு நம்முடைய தமிழக அரசு தற்போது புதிய சலுகையை பொது மக்களுக்கு அறிமுகம் செய்துள்ளது. அதாவது குடும்ப அட்டையை காண்பித்து ரூபாய் 50,000 வரை தனிநபர் கடனாக கூட்டுறவு வங்கிகளில் பெற்றுக் கொள்ளலாம் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு அதிரடி அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். மேலும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் வழிகாட்டலின் படி தனிநபர் எளிமையான முறையில் கூட்டுறவு வங்கிகளில் கடன் பெற்று கொள்ளலாம் எனவும் அவர் கூறியிருக்கிறார். இதன் மூலம் பல்வேறு தரப்பினர் கடனாக பணத்தை பெற்று தங்களுடைய தொழிலில் முதலீடு செய்வதற்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் கூறப்படுகிறது.