டேங்கர் லாரியின் பின்புறம் புகுந்த இன்னோவா கார்! கோர விபத்தில் EX எம்எல்ஏ மனைவியுடன் பரிதாப பலி!

ஆம்பூர் அருகே திருப்பத்தூர் முன்னாள் எம்எல்ஏ சுந்தரவேல் சென்றுகொண்டு இருந்த கார் மீது கண்டைனர் லாரி மோதி சம்பவ இடத்தில் முன்னாள் எம்எல்ஏ சுந்தரவேல், சுந்தரவேலின் மனைவி மற்றும் கார் டிரைவர் ஆகிய மூவரும் உயிரிழந்தனர்.


1991-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திருப்பத்தூர் தொகுதிக்கு அதிமுகவை சேர்ந்த சுந்தரவேல் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு பணியாற்றினார் சுந்தரவேல். 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் மறைவிற்கு பிறகு கட்சியில் ஏற்பட்ட பிளவுக்கு பிறகு, தற்போது டிடிவி தினகரனுடன் இணைந்து அவருக்கு ஆதரவாக அமமுக கட்சி சார்பில் திருப்பத்தூர் நகர செயலாளராகவும் பதவி வகித்தார்.

இன்று காலை தனது மனைவியுடன் சுந்தரவேல் சென்ற கார் விண்ணமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் அருகில் வந்த கண்டைனர் லாரி மீது மோதியதில் இவரின் கார் நசுங்கியது. பின்னர் உள்ளிருந்த மூவரும் அங்கேயே உயிரிழந்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், இவர்களின் உடலை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.