தேனி! ஈவிகேஎஸ் விஸ்வரூபம்! ஓபிஎஸ் மகன் தலை தெறிக்க ஓட்டம்!

தேனி மக்களவை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் முன்னிலையில் உள்ளார்


நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலின் வாக்கு  எண்ணிக்கையில் முன்னிலை நிலவரங்கள் வெளியாகிவருகின்றன.இதில் தமிழ்நாட்டில் நடந்து முடிந்த 38 தொகுதிகளுக்கான முன்னிலை நிலவரங்கள் வந்தவண்ணம் உள்ளன. 

மக்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தேனி  மக்களவை தொகுதியில்  காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் முன்னிலையில் உள்ளார். இவர் சுமார் 1000 வாக்குகள் முன்னிலையில் உள்ளார் என்ற தகவல்கள் வெளியாகிவுள்ளன. தேனி மக்களவை தொகுதியில் அதிமுக  சார்பில் போட்டியிட்ட  ஓபிஎஸ் மகன் பின்னடைவில் உள்ளார். இதனால் திமுக மற்றும் காங்கிரஸ் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தை பொறுத்தவரை திமுக கூட்டணி அதிக இடங்களில் முன்னிலையில் உள்ளது. திமுக கூட்டணி 35 இடங்களிலும், அதிமுக கூட்டணி 3 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.