ராகுல் டிராவிட் பந்துவீச்சில் பேட்டிங் செய்த முதலமைச்சர் ஈபிஎஸ்! வைரல் வீடியோ!

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட் பந்துவீச தமிழ்நாட்டின் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பேட்டிங் செய்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.


சர்வதேச தரத்தில் சேலத்தில் அமைந்துள்ள புதிய கிரிக்கெட் மைதானத்தை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி என்று திறந்து வைத்துள்ளார். மைதான திறப்பு விழா நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக ராகுல் டிராவிட் கலந்து கொண்டார். திறப்பு விழா முடிந்ததும் மைதானத்தில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட் பந்துவீச தமிழ்நாட்டின் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பேட்டிங் செய்தார்.

டிராவிடின் பந்துவீச்சில் எடப்பாடி பழனிச்சாமி பேட்டிங் செய்த வீடியோ ஆனது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. விழாவில் கலந்து கொண்டு பேசிய ராகுல் டிராவிட் கிராமப்புற வீரர்கள் தான் இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலம் என்று கருத்து தெரிவித்தார். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் பிசிசிஐ தலைவர் சீனிவாசன் ஐபிஎல் போட்டிகள் இந்த மைதானத்தில் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்படும் எனவும் அறிவித்தார். தோனி கண்டிப்பாக இந்த மைதானத்தில் விளையாடுவார் எனவும் அவர் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

சுமார் 13 ஏக்கர் நிலப்பரப்பில் 8 கோடி ரூபாய் செலவில் சேலம் அருகிலுள்ள வாழப்பாடியில் சர்வதேச தரத்தில் கிரிக்கெட் மைதானம் அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.