91 ஆயிரம் கோடி கடன்! அடுத்து முழ்கப்போகும் நிறுவனம் இதுதான்!

ஐ.எல் அண்ட் எஃப் எஸ் என்கிற நிறுவனம் 91 ஆயிரம் கடனில் சிக்கி முழுகும் நிலையில் இருக்கிறது. இந்த வங்கியில் இருந்து தொழிலதிபர் சிவசங்கரனின் பல்வேறு நிறுவனங்களுக்கு 2011 முதல் 2018 வரை 494 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டு உள்ளது.


ஆனால்,இந்த கடன் தொகை வேறு காரியங்களுக்கு பயன்படுத்தப் பட்டதால் கடன் தொகை திருப்பிச் செலுத்த படவில்லை. இதனால் ஐ.எல் அண்ட் எஃப் எஸ் நிறுவன நிர்வாகி பார்த்த சாரதி உட்பட பலர் மீது மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தது. அதைத் தொடர்ந்து சிவசங்கரனின் சொத்துக்கள் முடக்கப்பட்டன.

இந்த வழக்கில் பல பெருந்தலைகள் உருளும் என்று எதிர் பாக்கப்பட்டது. அதில் முதற்கட்டமாக மகாராஷ்டிரா நவ நிர்மான் சேனாவின் தலைவர்  ராஜ் தாக்கரே, சிவசேனாவைச் சேர்ந்தவரும் முன்னாள் மகாராஷ்ட்ரா முதல்வருமான மனோஹர் ஜோஷியின் மகன் உன்மேஷ் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. உன்மேஷ் ஜோஷியின் கோகினூர் என்கிற கட்டுமான நிறுவனத்திற்கு,  ஐ எல் அண்ட் எஃப் எஸ் நிறுவனம் 650 கோடி ரூபாய் கடன் கொடுத்திருப்பதுடன் 250 கோடி மதிப்புள்ள கோகினூரி பங்குகளையும் வாங்கியுள்ளது.

ஜோஷியின் நிறுவனம் கோகினூர் ஸ்குவார்ட்டர்ஸ் என்கிற கட்டிடத்தை கட்டி வருகிறது. அதில் ராஜ் தாக்கரேவும் உன்மேஷ் ஜோஷியும் கூட்டுச் சேர்ந்து சில சொத்துக்களை ஏலத்தில் எடுத்துள்ளனர்.அந்த கட்டுமானப் பணி நஷ்டத்தில் இருப்பதால் இது திட்டமிட்ட மோசடி என்கிறது அமலாக்கத்துறை.

அதேசமயம் ஐ எல் அண்ட் எஃப் எஸ்ஸின் செய்தி தொடர்பாளர் சந்த்தீப் தேஷ் பாண்டே இதைக் கடுமையாக எதிர்க்கிறார். இது முழுக்க முழுக்க அரசியல் நோக்கம் கொண்டது.கடந்த பாராளுமன்றத் தேர்தலின்போது ராஜ்தாக்கரே பிஜேபிக்கு எதிராக அதிரடி பிரச்சாரங்கள் செய்தார்,விரைவில் மகாராஷ்ட்ரா மாநில சட்டமன்றத் தேர்தல் வர இருப்பதால் அவரை மிரட்ட இந்த பழைய வழக்கைத் தோண்டி எடுக்கிறது அமலாக்கத்துறை என்பது அவரது வாதமாக இருக்கிறது.