சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆல் ரவுண்டர் பிராவோ சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படங்களை இதுவரை பார்த்ததில்லை. அனால் அவரை நேரில் சந்திக்க விரும்புகிறேன் என்று கூறியுள்ளார்.
தலைவா உன்ன பார்க்கனும்! பிராவோவின் சூப்பர் ஸ்டார் ஆசை!

சென்னை சூப்பர் அணியின் பிராவோ ஆடுகளத்தில் விக்கெட் எடுத்து ஆட்டம் போடுவதிலும், திடீரென சென்னை ஏரியாவின் கடைகளுக்கும், ஷாப்பிங் மால்களுக்கும் நுழைந்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுப்பார் என்பது அனைவரும் அறிந்ததே.
கடந்த வாரம் சென்னை எக்ஸ்பிரஸ் அவென்யு மாலில் சென்ற பிராவோ அங்கு ஆட்டம் பாட்டம் என DJ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார். இந்நிலையில் பிராவோ அளித்த பேட்டி ஒன்றில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் படங்களை நான் பார்த்ததில்லை. அவரை பற்றி நிறைய கேள்வி பட்டிருக்கிறேன். ஆகையால் அவரை சந்திக்க விரும்புகிறேன் என்றும் கூறி இருக்கிறார்.
பிராவோ நீண்ட காலமாக சென்னை அணிக்கு விலையாடி வருவதால் சென்னை மக்களின் உணவு, உடை, கலாச்சாரம் ஆகியவற்றில் நன்றாக கலந்து சென்னை மக்களின் செல்ல பிள்ளை போல் தற்போது பிராவோ மாறி வருகிறார்.
மேலும் அவர் சித்திரம் பேசுதடி 2 படத்தில் ஒரு பாடல் பாடி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.